சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருட்டு: வெளிச்சத்துக்கு வந்த போலி நகை விபரம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருட்டு: வெளிச்சத்துக்கு வந்த போலி நகை விபரம்

Added : அக் 07, 2021 | கருத்துகள் (5)
Share
தர்மபுரி:அன்னசாகரம் விநாயகர் சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடந்த கொள்ளை சம்பவத்தால் கோயிலில் போலி நகைகள் இருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.தர்மபுரி அன்னாகரத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது விநாயகர் சிவசுப்பிமணிய சுவாமி கோயில். அர்ச்சகர் தண்டபாணி 60 நேற்று முன்தினம் இரவு பூஜை முடித்து விட்டு கோயிலை பூட்டிச் சென்றார். நேற்று காலை 6:30
 சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருட்டு: வெளிச்சத்துக்கு வந்த போலி நகை விபரம்

தர்மபுரி:அன்னசாகரம் விநாயகர் சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடந்த கொள்ளை சம்பவத்தால் கோயிலில் போலி நகைகள் இருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தர்மபுரி அன்னாகரத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது விநாயகர் சிவசுப்பிமணிய சுவாமி கோயில். அர்ச்சகர் தண்டபாணி 60 நேற்று முன்தினம் இரவு பூஜை முடித்து விட்டு கோயிலை பூட்டிச் சென்றார். நேற்று காலை 6:30 மணிக்கு கோயிலை திறந்தபோது பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.

அவரது தகவலின்படி ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ்,செயல் அலுவலர் விமலா, தர்மபுரி டவுன் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் கோவிலுக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் கோவிலில் இருந்து சிகப்பு கல் பதித்த நான்கு வெள்ளிக்கீரிடம் உட்பட 21.79 கிலோ வெள்ளி பொருட்கள்,3தங்கத்தாலி திருடுபோனதாக கூறப்பட்டது.

ஆனால்கோயிலில் இருந்தகிரீடங்கள்,தங்கத்தாலி போலியானது என்பது அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்தது.அறநிலைத்துறை பதிவேட்டில் உள்ளதை விட கோயிலில் கூடுதலாக வெள்ளி, தங்க பொருட்கள் இருந்தன. போலீசாருக்கு கணக்கு காட்ட முடியாமல் அறநிலையத்துறையினர் திணறியதால் மாலை 5:30 மணி வரை புகார் தெரிவிக்கவில்லை. அறநிலையத்துறை உதவி ஆணையரை அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது ''கோயிலில் நகைகள் பதிவேட்டின் படி ஆய்வு செய்யப்பட்டது. போலி நகையாக இருக்க வாய்ப்பில்லை. செயல் அலுவலர் விமலா மூலம்புகார் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.

கொள்ளையடித்த மர்ம நபர்கள் கண்காணிப்பு கேமரா ஹார்டு டிஸ்கை அகற்றி அதை தண்ணீர் தொட்டியில் வீசி சென்றுள்ளனர்.திருதொண்டர் சபை நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:இந்த கோயில் சொத்துகள்குறித்து 2014ல் ஆர்.டி.ஓ. உள்ளிட வருவாய்த் துறையினர்,ஹிந்து சமய அறநிலையத் துறையினர்,போலீசார் நில அளவை பிரிவு உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளுடன் கணக்கெடுக்கப்பட்டது.

ஆனால் இதுவரை ஆக்கிரமிப்பு சொத்துக்கள் கையப்படுத்தவில்லை. நேற்றுகாலை 6:30 மணிக்குகொள்ளை குறித்துஹிந்து சமய அறநிலையத்துறையினருக்கு தகவல் தெரிந்தும் பிற்பகல் 3:30 மணி வரை போலீசில் புகார் அளிக்கவில்லை. இங்குள்ள நகைகளை உரிய முறையில் சோதனை செய்ய வேண்டும். முறைகேடுகள் இருந்தால் தவறு செய்தவர்கள், துணை சென்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X