தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சி தேர்தல்: முதல் கட்டத்தில் முழு அமைதி

Updated : அக் 07, 2021 | Added : அக் 07, 2021 | கருத்துகள் (1+ 12)
Share
Advertisement
சென்னை : ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான முதல் கட்ட தேர்தல் அமைதியாகநடந்தது.காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் கள்ளக்குறிச்சி வேலுார் திருப்பத்துார் ராணிப்பேட்டை திருநெல்வேலி தென்காசி மாவட்டங்களில் உள்ள 27 ஆயிரத்து 3 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு அக். 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.இதுமட்டுமின்றி 28 மாவட்டங்களில்
ஊரக உள்ளாட்சி தேர்தல்: முதல் கட்டத்தில் முழு அமைதி

சென்னை : ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான முதல் கட்ட தேர்தல் அமைதியாகநடந்தது.காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் கள்ளக்குறிச்சி வேலுார் திருப்பத்துார் ராணிப்பேட்டை திருநெல்வேலி தென்காசி மாவட்டங்களில் உள்ள 27 ஆயிரத்து 3 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு அக். 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.இதுமட்டுமின்றி 28 மாவட்டங்களில் காலியாகவுள்ள 789 பதவிகளுக்கும் அக். 9ல் இடைத்தேர்தல் நடக்கிறது.


latest tamil news



மனு தாக்கல் செப். 15 முதல் 22ம் தேதி வரை நடந்தது. இதில் 97 ஆயிரத்து 831 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 1166 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 14 ஆயிரத்து 571 பேர் வாபஸ் பெற்றனர்.
போட்டியின்றி 2981 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.நீதிமன்ற உத்தரவுப்படியும் மனு தாக்கல் செய்யாததாலும் சில பதவிகளுக்கு தேர்தல் நடக்கவில்லை. இறுதியாக 23 ஆயிரத்து 998 பதவிகளுக்கு 79 ஆயிரத்து 433 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
28 மாவட்ட இடைத்தேர்தலில் 418 பதவிகளை கைப்பற்ற 1386 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.ஒன்பது மாவட்டங்களில் உள்ள 78 மாவட்ட கவுன்சிலர் 755 ஒன்றிய கவுன்சிலர் 1577 ஊராட்சி தலைவர் 12 ஆயிரத்து 252 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு முதல் கட்டமாக நேற்று தேர்தல் நடந்தது.
காலை 7:00 மணி முதல் ஓட்டளிக்க வாக்காளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இத்தேர்தலில் ஓட்டளிக்க 41.94 லட்சம் பேர் தகுதியுடைவர்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மாநில தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட 'பூத் சிலிப்' கிடைக்க பெறாதவர்கள் 'ஆதார் டிரைவிங் லைசென்ஸ்' உள்ளிட்ட 11 ஆவணங்களை காட்டி ஓட்டளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. சில இடங்களில் அ.தி.மு.க. - தி.மு.க. வேட்பாளர்களிடையே மோதல் ஏற்பட்டது.
பெரிய அசம்பாவித சம்பவங்கள் இல்லாமல் மாலை 6:00 மணிக்கு தேர்தல் முடிந்தது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5:00 மணிக்கு பின் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி ஓட்டளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
காலை 9:00 மணி நிலவரப்படி 7.72 சதவீதம்; 11:00 மணிக்கு 19.61 சதவீதம்; மதியம் 1:00 மணிக்கு 33.78 சதவீதம்; 3:00 மணிக்கு 52.40 சதவீத ஓட்டுக்களும் பதிவாகின.இரண்டாம் கட்ட தேர்தல் அக்.,9ம் தேதி நடக்கவுள்ளது. இதற்கான பிரசாரம் இன்று மாலை 5:00 மணியுடன் நிறைவு
பெறுகிறது.


74 மையங்களில்ஓட்டு எண்ணிக்கை



இரண்டு கட்ட தேர்தலிலும் பதிவாகும் ஓட்டுக்கள் 74 மையங்களில் எண்ணப்பட உள்ளன என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (1+ 12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
07-அக்-202109:07:38 IST Report Abuse
duruvasar திமுக உறுப்பினர் கார்டு முகாம் போட்டு கூவி கூவி வழங்கியபோது வாங்காமல் இப்போ அழுது என்ன பயன் மை சன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X