அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் பணி வயது வரம்பு நீக்க ராமதாஸ் கோரிக்கை

Added : அக் 07, 2021
Share
Advertisement
சென்னை:'ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை நீக்க வேண்டும்' என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:விரிவுரையாளர் பணிக்கு எந்த வயது வரம்பும் நிர்ணயிக்கப்படாத நிலையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு மட்டும் வயது வரம்பு நிர்ணயிப்பது எந்த வகையிலும் நியாயமற்றது. தமிழகத்தில் 2013 2014 2019 ஆகிய ஆண்டுகளில் மட்டும் தான் முதுநிலை ஆசிரியர் போட்டித் தேர்வுகள்

சென்னை:'ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை நீக்க வேண்டும்' என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:

விரிவுரையாளர் பணிக்கு எந்த வயது வரம்பும் நிர்ணயிக்கப்படாத நிலையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு மட்டும் வயது வரம்பு நிர்ணயிப்பது எந்த வகையிலும் நியாயமற்றது. தமிழகத்தில் 2013 2014 2019 ஆகிய ஆண்டுகளில் மட்டும் தான் முதுநிலை ஆசிரியர் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஆசிரியர் பணிக்கு 40 வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்ட போது அதை கடுமையாக எதிர்த்தவர்களில் முதல்வரும் ஒருவர்.

ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை அகற்றுவதாக வாக்குறுதி அளித்தவர் அவர். அதனால் ஆசிரியர் பணிக்கு வயது வரம்பை அகற்ற வேண்டும் என்பதில் உள்ள நியாயத்தை முதல்வர் புரிந்து கொள்வார்.லட்சக்கணக்கான பட்டதாரிகளின் எதிர்காலத்தை கருத்தில் வைத்து ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு ஆணையை அரசு ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X