அரசியல் செய்தி

தமிழ்நாடு

புலம்பெயர் தமிழர் நல வாரியம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Added : அக் 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க 'புலம்பெயர் தமிழர் நல வாரியம்' அமைக்கப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.அவரது அறிக்கை:* வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்காக 'புலம்பெயர் தமிழர் நல வாரியம்' அமைக்கப்படும். அரசு மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் 13 பேர் இடம்பெறுவர். 'புலம்பெயர் தமிழர் நல நிதி' என 5 கோடி ரூபாய் மாநில அரசின்

சென்னை:வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க 'புலம்பெயர் தமிழர் நல வாரியம்' அமைக்கப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:* வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்காக 'புலம்பெயர் தமிழர் நல வாரியம்' அமைக்கப்படும். அரசு மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் 13 பேர் இடம்பெறுவர். 'புலம்பெயர் தமிழர் நல நிதி' என 5 கோடி ரூபாய் மாநில அரசின் முன்பணத்தை வைத்து உருவாக்கப்படும்.மூலதன செலவினமாக 1.40 கோடி ரூபாய்; நலத் திட்டங்கள் மற்றும் செலவுகளுக்காக ஆண்டு தோறும் ௩ கோடி ரூபாய் ஒதுக்கப்படும்

* புலம்பெயர் தமிழர் குறித்த தரவு தளம் ஏற்படுத்தப் படும். வாரியத்தில் பதிவு செய்பவர்களுக்கு விபத்து ஆயுள் காப்பீடு திட்டம் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டம் அடையாள அட்டையுடன் வழங்கப்படும்
* வெளிநாட்டிற்கு செல்லும் குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்கள் பணியின்போது இறக்க நேரிட்டால் அவர்கள் குழந்தைகளுக்கு கல்வி திருமண உதவித்தொகை வழங்கப்படும்

* வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் ஆலோசனை பெற வசதியாக கட்டணமில்லா தொலைபேசி வசதி, வலைதளம், அலைபேசி செயலி அமைக்கப்படும். தனியாக சட்ட உதவி மையம் அமைக்கப்படும்

* கொரோனா காரணமாக 7 லட்சம் தமிழர்கள் தாயகம் திரும்பி உள்ளனர். இவர்கள் குறு தொழில்கள் செய்ய அதிகபட்சமாக 2.50 லட்சம் ரூபாய் மானியத்துடன் கூடிய கடன் வசதி செய்து தரப்படும். இதற்கென ௬ கோடி ரூபாய் ஒதுக்கப்படும்

* புலம்பெயர்ந்த தமிழர்கள் தாம் பிறந்து வளர்ந்த சொந்த ஊரில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த 'எனது கிராமம்' என்ற திட்டம் துவக்கப்படும்

* வெளிநாடுகளில் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ள தமிழர்களின் வாரிசுகளுக்கு தமிழ் இணைய கல்விக் கழகம் வழியாக தமிழ் கற்றுக் கொடுக்கப்படும். அங்குள்ள கல்வி நிறுவனங்களில் தமிழ் பயிற்றுவிக்க ஊக்கத்தொகை மற்றும் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படும்

* அந்தந்த நாடுகளில் உருவாக்கி உள்ள நலச் சங்கங்கள் ஒருங்கிணைக்கப்படும். அவற்றின் வழியே நம்முடைய கலை இலக்கியம் பண்பாடு பரிமாற்றங்கள் நடக்கும். இதற்காக ௪ கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

* ஒவ்வொரு ஆண்டும் ஜன. 12ம் தேதி 'புலம்பெயர்ந்த உலகத் தமிழர் நாள்' கொண்டாடப்படும்

* புலம்பெயர் தமிழர் நல வாரியம் மற்றும் புலம்பெயர் தமிழர் நல நிதிக்காக 6.40 கோடி ரூபாய்; அவர்களுக்கான நலத் திட்டங்களுக்காக 8.10 கோடி; தமிழ் கல்வி கலை பண்பாடு மற்றும் கருத்து பரிமாற்றத்திற்காக 5.50 கோடி என மொத்தம் 20 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jeya kumar -  ( Posted via: Dinamalar Android App )
07-அக்-202103:39:14 IST Report Abuse
jeya kumar Best decision by TN Govt. for NRI from Tamilnadu. More helpful
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X