அரசியல் செய்தி

தமிழ்நாடு

''அடுத்த 25 ஆண்டுக்கான வளர்ச்சி குறித்து யோசிப்பவர் மோடி'' அண்ணாமலை புகழாரம்

Added : அக் 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை:''அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சி குறித்து யோசிப்பவர் மோடி'' என பா.ஜ. மாநிலத்தலைவர் அண்ணாமலை பேசினார்.கோவை சிந்தனையாளர் பேரவை சார்பில் மோடி அரசின் புதிய இந்தியா எனும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நேற்று நடந்தது. தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை பேசுகையில்' 'இந்தியாவை முன்னேற்றப் பாதையில் பிரதமர் மோடி கொண்டு சென்று கொண்டுள்ளார். கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியா
 ''அடுத்த 25 ஆண்டுக்கான  வளர்ச்சி குறித்து யோசிப்பவர் மோடி'' அண்ணாமலை புகழாரம்

கோவை:''அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சி குறித்து யோசிப்பவர் மோடி'' என பா.ஜ. மாநிலத்தலைவர் அண்ணாமலை பேசினார்.

கோவை சிந்தனையாளர் பேரவை சார்பில் மோடி அரசின் புதிய இந்தியா எனும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நேற்று நடந்தது. தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை பேசுகையில்' 'இந்தியாவை முன்னேற்றப் பாதையில் பிரதமர் மோடி கொண்டு சென்று கொண்டுள்ளார். கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியா பல்வேறு முன்னேற்றங்களை அடைந்துள்ளது.

அவர் மேற் கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படையாக உள்ளன. அவர் அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சி குறித்து யோசிப்பவர். புதிய இந்தியாவை நோக்கி அவரது பயணம் உள்ளது. உலகில் உள்ள வேறு எந்த நாட்டினருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்ற எண்ணத்தை இந்தியர்கள் மனதில் ஏற்படுத்தியவர்'' என்றார்.

கோவையில் நிருபர்களிடம் அண்ணாமலை அளித்த பேட்டி: உ.பி.யில் நடந்த துயர சம்பவத்துக்கு அம்மாநில அரசு யாரையும் விடமாட்டோம் என தெரிவித்து ள்ளது. ஆனால் எதிர்கட்சிகள் அரசியலாக்க முயற்சிக்கின்றன. வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழகத்தில் எந்த ஒரு விவசாயியும் போராட்டம் நடத்தவில்லை.இது யாருக்கும் எதிரானது அல்ல என்பது இதன் மூலம் தெரிகிறது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jeya kumar -  ( Posted via: Dinamalar Android App )
07-அக்-202103:35:58 IST Report Abuse
jeya kumar Ambani adani 25 yrs development?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X