பொது செய்தி

தமிழ்நாடு

கால்கள் புதையும்; வாகனங்கள் கவிழும்! 40 ஆண்டாக மண் ரோடு

Added : அக் 07, 2021
Share
Advertisement
திருப்பூர் : எஸ்.ஆர்., நகர் வடக்கு பகுதியில் உள்ள வீதிகள், 40 ஆண்டாக மண் சாலையாக, குண்டும் குழியுமாக, காட்சியளிக்கின்றன; மழைக்காலத்தில் நடந்துசென்றால் கால்கள் புதையும்; வாகனங்களில் சென்றால் கவிழும் நிலை நீடிக்கிறது.எஸ்.ஆர்.நகர் வடக்கு குடியிருப்போர் நலச் சங்க தலைவர் கணேசன் உள்ளிட்டோர், மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமாரிடம் அளித்த மனு:திருப்பூர், மங்கலம் ரோடு, எஸ்.ஆர்.,
 கால்கள் புதையும்; வாகனங்கள் கவிழும்!  40 ஆண்டாக மண் ரோடு


திருப்பூர் : எஸ்.ஆர்., நகர் வடக்கு பகுதியில் உள்ள வீதிகள், 40 ஆண்டாக மண் சாலையாக, குண்டும் குழியுமாக, காட்சியளிக்கின்றன;

மழைக்காலத்தில் நடந்துசென்றால் கால்கள் புதையும்; வாகனங்களில் சென்றால் கவிழும் நிலை நீடிக்கிறது.எஸ்.ஆர்.நகர் வடக்கு குடியிருப்போர் நலச் சங்க தலைவர் கணேசன் உள்ளிட்டோர், மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமாரிடம் அளித்த மனு:திருப்பூர், மங்கலம் ரோடு, எஸ்.ஆர்., நகர் வடக்கு பகுதி, 40 ஆண்டுகளுக்கு முன், ஏற்படுத்தப்பட்ட மனைப்பகுதியாகும்.

ஒன்றரை ஆண்டுக்கு முன், பாதாள சாக்கடைப் பணிக்காக தோண்டப்பட்ட குழிகள், இன்னும் மூடப்படாததால், இங்குள்ள குமரன் 1, 2,3வது வீதிகள், திரு.வி.க., சாலை, நேதாஜி மெயின் ரோடு ஆகிய தார் சாலைகள், நேதாஜி முதல் மற்றும் குறுக்கு வீதி, நேதாஜி, 2, 3, 4, 5வது வீதிகள்.குமரன் 4, 5, 6வது வீதிகள், கஸ்துாரிபாய் வீதி ஆகிய மண் வீதிகள் சேதமடைந்துள்ளன. களிமண் பூமி என்பதால் நடந்தது சென்றால் கால்கள் புதைகின்றன; வாகனங்களோ கவிழ்கின்றன.வீடுகளுக்கு பாதாள சாக்கடைக்கு இணைப்பு கொடுக்காததற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை; சாலைகளையும் சீர்செய்யவில்லை. பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

குடிநீர் பிரச்னை: இங்கு புதிய குடிநீர் ஆய்வாளர் பொறுப்பேற்றது முதல் 18 முதல் 20 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வருகிறது. ஒரு குடம் நிறைய இரண்டு நிமிடமாகிறது. குடிநீருக்குச் செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளார். அதிக விலை கொடுத்து குடிநீர் வாங்க வேண்டியுள்ளது.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X