சாக்கடையில் சாயக்கழிவுநீர் பிரின்டிங் நிறுவனம் அத்துமீறல்

Added : அக் 07, 2021
Share
Advertisement
திருப்பூர் : கருவம்பாளையத்தில், அனுமதியின்றி இயங்கும் பிரின்டிங் நிறுவனம், கழிவுநீரை சாக்கடை கால்வாயில் திறந்துவிட்டு, இயற்கையை பாழ்படுத்துகிறது.திருப்பூரில், பின்னலாடை துறை சார்ந்து, சாய ஆலைகள், பிரின்டிங் நிறுவனங்கள் அதிகளவில் இயங்குகின்றன. சில பிரின்டிங், சாய ஆலைகள், அனுமதி பெறாமல் இயங்குவது, கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றுவது போன்ற அத்துமீறல்களில்

திருப்பூர் : கருவம்பாளையத்தில், அனுமதியின்றி இயங்கும் பிரின்டிங் நிறுவனம், கழிவுநீரை சாக்கடை கால்வாயில் திறந்துவிட்டு, இயற்கையை பாழ்படுத்துகிறது.திருப்பூரில், பின்னலாடை துறை சார்ந்து, சாய ஆலைகள், பிரின்டிங் நிறுவனங்கள் அதிகளவில் இயங்குகின்றன.

சில பிரின்டிங், சாய ஆலைகள், அனுமதி பெறாமல் இயங்குவது, கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றுவது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடுகின்றன.மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்தாலும், விதிமீறல்கள் தொடர்கின்றன. அவ்வகையில், மங்கலம் ரோடு, கருவம்பாளையம், எருக்காடு மூன்றாவது வீதியில், ஒரு கட்டடத்தின் தரை தளத்தில், வேஸ்ட் பனியன் குடோன் இயங்குகிறது.

அதன் மேல்தளத்தில், அனுமதி பெறாத பிரின்டிங் நிறுவனம் ஒன்று இயங்குகிறது.இந்நிறுவனம், பிரின்டிங் கழிவுநீரை சுத்திகரிக்காமல், குழாய் மூலம், சாக்கடை கால்வாயில் திறந்து விடுகின்றனர். சிவப்பு, பச்சை, ஆரஞ்ச் என தினம் வெவ்வேறு நிறத்தில் சுத்திகரிக்காத பிரின்டிங்கழிவு நீர், பாய்ந்தோடுகிறது. ரசாயனம் மிகுந்த இந்த பிரின்டிங் கழிவுநீர், நொய்யலாற்றில் சென்று சேருகிறது.பகல் நேரத்திலேயே பிரின்டிங் கழிவுநீரை தாராளமாக திறந்துவிடுகின்றனர். 'மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, அனுமதி பெறாமலும், விதிமீறி பிரின்டிங் கழிவை வெளியேற்றி, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நிறுவன இயக்கத்தை முடக்கவேண்டும்.வாடகைக்காக, அத்துமீறலுக்கு துணைபோகும், கட்டட உரிமையாளர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்கின்றனர், எருக்காடு பகுதி மக்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X