பொது செய்தி

தமிழ்நாடு

மகாளய அமாவாசை: கோவில்களில் சிறப்பு வழிபாடு தடையால் பக்தர்கள் ஏமாற்றம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
மகாளய அமாவாசையையொட்டி, கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அனுமதிக்கப்பட்ட கோவில்களில், ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை முக்கியமானதாகும். இந்நாளில், மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.சூலுார்அமாவாசையை முன்னிட்டு, சூலுார் சுற்றுவட்டார சிவன், பெருமாள், அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன.


மகாளய அமாவாசையையொட்டி, கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அனுமதிக்கப்பட்ட கோவில்களில், ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை முக்கியமானதாகும்.

இந்நாளில், மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.சூலுார்அமாவாசையை முன்னிட்டு, சூலுார் சுற்றுவட்டார சிவன், பெருமாள், அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் கட்டுப்பாடுகள் விதிக்கிப்பட்டிருந்தன.பக்தர்கள், சுவாமி தரிசனத்துக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

கிராம கோவில்களில் வழக்கம்போல், அமாவாசை பூஜைகள் நடந்தன. கரவளி மாதப்பூர் மாதாங்கி அம்மன் கோவிலில் நடந்த பூஜையில், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார்.* சோமனுார் அடுத்துள்ள வாழைத் தோட்டத்து அய்யன் கோவிலில், பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட, கோவில் ஊழியர்கள் அனுமதி மறுத்தனர். இதனால், பக்தர்கள் ஆவேசமடைந்தனர்.பா.ஜ., மற்றும் ஹிந்து இயக்கத்தினர்

அங்கு திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மேட்டுப்பாளையம்மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன், காரமடை அரங்கநாதர் ஆகிய கோவில்களில், அரசு உத்தரவின்படி, பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.இதனால், ஏராளமான பக்தர்கள், கோவில் நுழைவாயில் முன்பாக, சூடம் ஏற்றி வழிபட்டு சென்றனர்.பக்தர்கள் கூறுகையில், 'டாஸ்மாக் மதுக்கடை, சினிமா தியேட்டர்களை திறக்க, தமிழக அரசு அனுமதித்துள்ளது.

ஆனால், வழிபாட்டுத் தலங்களை திறக்க தடை விதித்துள்ளது. முக்கியமான அமாவாசை மற்றும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில், பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.இதனால், லட்சக்கணக்கானவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே, தமிழக அரசு, எல்லா நாட்களிலும் கோவில்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
-நமது நிருபர் குழு- -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X