பொது செய்தி

தமிழ்நாடு

வனங்களின் எதிரி 'பிளாஸ்டிக்'; வனச்சரக அலுவலர் கவலை

Added : அக் 07, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூர் வனச்சரகம், திருப்பூர் லயன்ஸ் மற்றும் சிக்கண்ணா அரசு கலை கல்லுாரியில் நாட்டுநலப்பணித்திட்டம் அலகு - 2 சார்பில், வனவிலங்கு வார கருத்தரங்கு குமரன் அரங்கில் நேற்று நடந்தது.கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ்., அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார்.திருப்பூர் வனச்சரக அலுவலர் செந்தில்குமார் பேசுகையில்,
 வனங்களின் எதிரி 'பிளாஸ்டிக்'; வனச்சரக அலுவலர் கவலை

திருப்பூர் : திருப்பூர் வனச்சரகம், திருப்பூர் லயன்ஸ் மற்றும் சிக்கண்ணா அரசு கலை கல்லுாரியில் நாட்டுநலப்பணித்திட்டம் அலகு - 2 சார்பில், வனவிலங்கு வார கருத்தரங்கு குமரன் அரங்கில் நேற்று நடந்தது.

கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ்., அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார்.திருப்பூர் வனச்சரக அலுவலர் செந்தில்குமார் பேசுகையில், ''மாணவர்களாகிய நீங்கள் வனவிலங்குகளை என்றும் அழிக்க கூடாது. அவற்றை பாதுகாக்க வேண்டும்.பொதுமக்களிடம் இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

வனங்களின் சமீபத்திய எதிரி பிளாஸ்டிக். பிளாஸ்டிக் உபயோகிப்பதால் காடுகளின் நிலங்கள் பாதிக்கப்படுகின்றன,'' என்றார்.வனவிலங்குகளின் வாழ்க்கை நிலை, வனவிலங்குகளுக்கு நேரிடும் விளைவுகள், வனவிலங்குகளுக்கும் மனிதனுக்கும் இடையே ஏன் மோதல் ஏற்படுகிறது, அவற்றை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்று மாணவர்களுக்கு விளக்கினார்.லயன்ஸ் சங்க செயலர் பொன்மூர்த்தி வாழ்த்துரை வழங்கினார். வனவர் உமா மாகேஷஸ்வரி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X