பொது செய்தி

தமிழ்நாடு

அய்யன் கோவிலில் பொங்கல் வைத்து  வழிபாடு பக்தர்கள் மீது போலீசில் புகார்

Added : அக் 07, 2021
Share
Advertisement
திருப்பூர் : அதிகாரிகள் தடுத்தும், அத்துமீறி சென்ற பக்தர்கள், அய்யன் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.தமிழக அரசு, கொரோன ஊரடங்கு காரணமாக, திருவிழா கொண்டாட தடை விதித்துள்ளது. குறிப்பாக, கோவில்களில் திருவிழா, சிறப்பு பூஜைகள் நடக்க தடை தொடர்கிறது. மகாளய அமாவாசை தினமான நேற்று, பக்தர்கள் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.அய்யன் கோவிலில், மஹாளயபட்ச அமாவாசை


திருப்பூர் : அதிகாரிகள் தடுத்தும், அத்துமீறி சென்ற பக்தர்கள், அய்யன் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

தமிழக அரசு, கொரோன ஊரடங்கு காரணமாக, திருவிழா கொண்டாட தடை விதித்துள்ளது. குறிப்பாக, கோவில்களில் திருவிழா, சிறப்பு பூஜைகள் நடக்க தடை தொடர்கிறது. மகாளய அமாவாசை தினமான நேற்று, பக்தர்கள் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.அய்யன் கோவிலில், மஹாளயபட்ச அமாவாசை அன்று பொங்கல் வைக்க வேண்டுமென, பல்வேறு பகுதியை சேர்ந்த பக்தர்கள் சென்றிருந்தனர்.

அதிகாரிகள், பொங்கல் வைக்க கூடாதென தடுத்ததால், தரிசனம் செய்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.இந்நிலையில், பொங்கல் வைக்க அனுமதிக்க வேண்டுமென, பக்தர்களும், பா.ஜ., நிர்வாகிகளும், கோவில் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பக்தர்கள் சிலர் இணைந்து, பொங்கல் வைத்து, வழிபாடு நடத்தினர்.இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் மேனகாவிடம் கேட்டபோது,''கொரோனா ஊரடங்கு காரணமாக, கோவிலில் பொங்கல் வைக்க அனுமதியில்லை;

தரிசனத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிலர் அத்துமீறி சென்று பொங்கல் வைத்தனர். இதுகுறித்து மங்கலம் போலீசில் புகார் செய்துள்ளோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X