சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கமல், சீமானைக் கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
சூலுார் : சுல்தான்பேட்டையில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ம.நீ.ம., கட்சித் தலைவர் கமல் ஆகியோர், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்து விமர்சித்து கருத்து கூறியதற்கு, கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.அவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அகில இந்திய விவசாய தொழிலாளர்

சூலுார் : சுல்தான்பேட்டையில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ம.நீ.ம., கட்சித் தலைவர் கமல் ஆகியோர், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்து விமர்சித்து கருத்து கூறியதற்கு, கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.அவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில், சுல்தான்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் துரைசாமி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமானோர் பங்கேற்றனர்.கமல், சீமான் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கொண்டு வரப்பட்ட, 100 நாள் வேலை உறுதி திட்டத்தை, தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்த, அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X