பொது செய்தி

தமிழ்நாடு

மரங்கள் வெட்டி அகற்றம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி, 3வது மண்டலம், 39வது வார்டு பகுதியில் மணியகாரம்பாளையம் ரோடு உள்ளது. ராக்கியாபாளையம் பிரிவு காங்கயம் ரோட்டிலிருந்து செல்லும் பிரதான ரோடாக இது உள்ளது.இந்த ரோட்டில், சமீபத்தில் மழை நீர் வடிகால் அமைப்பு கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது ரோட்டின் ஓரத்தில் இருந்த நன்கு வளர்ந்த மரங்கள் பாதிக்காத வகையில் கட்டுமான பணி
 மரங்கள் வெட்டி அகற்றம்

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி, 3வது மண்டலம், 39வது வார்டு பகுதியில் மணியகாரம்பாளையம் ரோடு உள்ளது. ராக்கியாபாளையம் பிரிவு காங்கயம் ரோட்டிலிருந்து செல்லும் பிரதான ரோடாக இது உள்ளது.

இந்த ரோட்டில், சமீபத்தில் மழை நீர் வடிகால் அமைப்பு கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது ரோட்டின் ஓரத்தில் இருந்த நன்கு வளர்ந்த மரங்கள் பாதிக்காத வகையில் கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையில், மணியகாரம்பாளையம் ரோடு பகுதியில் ஒரு தனியார் கட்டடத்தின் முன் மழை நீர் வடிகாலை ஒட்டி வளர்ந்திருந்த வேப்ப மரம் நேற்று காலை வெட்டி அகற்றப்பட்டது.

இதை கண்ட பசுமை ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.இது குறித்து மரத்தை வெட்டிய ஊழியர்களிடம் கேட்ட போது, 'அங்குள்ள குழாய்களுக்கு இடையூறாக இருப்பதால், அனுமதி பெற்று வெட்டப்படுகிறது' என தெரிவித்துள்ளனர்.மழை நீர் வடிகால் கட்டுமானத்தின் கூட வெட்டப்படாத மரம் தற்போது உரிய காரணமின்றி வெட்டப்படுகிறது. ஒரு சில ஊழியர்கள் தன்னிச்சையாக இது போல் செயல்படுகின்றனர். அதிகாரிகள் உரிய கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X