கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சூளை நிலங்களில் சட்டவிரோத சமன்படுத்தல்; காற்றில் பறக்குது ஐகோர்ட் உத்தரவு

Added : அக் 07, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம் : சின்னதடாகம் பள்ளத்தாக்கு பகுதியில், பிரம்மாண்டமாகத் தோண்டப்பட்ட குழிகளை, சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக, சட்டவிரோதமாக சமன்படுத்தும் பணி நடந்து வருகிறது.சின்னதடாகம் வட்டாரத்தில் வீரபாண்டி, சோமையம்பாளையம், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை, சின்னதடாகம் ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 187 செங்கல் சூளைகள் இயங்கி வந்தன.இவை சுற்றுச்சூழல், கனிம வளத்துறை
 சூளை நிலங்களில் சட்டவிரோத சமன்படுத்தல்;  காற்றில் பறக்குது ஐகோர்ட் உத்தரவு


பெ.நா.பாளையம் : சின்னதடாகம் பள்ளத்தாக்கு பகுதியில், பிரம்மாண்டமாகத் தோண்டப்பட்ட குழிகளை, சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக, சட்டவிரோதமாக சமன்படுத்தும் பணி நடந்து வருகிறது.

சின்னதடாகம் வட்டாரத்தில் வீரபாண்டி, சோமையம்பாளையம், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை, சின்னதடாகம் ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 187 செங்கல் சூளைகள் இயங்கி வந்தன.இவை சுற்றுச்சூழல், கனிம வளத்துறை உள்ளிட்ட எந்த துறைகளின் அனுமதியும் இல்லாமல், மானாவாரியாக மிக ஆழத்துக்கு, செம்மண்ணை தோண்டி, செங்கற்களை உற்பத்தி செய்து வந்தன.தடைவிதிப்புஇதனால், சுற்றுச்சூழலும் வனவிலங்குகளும் பாதிக்கப்படுவதாக, சென்னை ஐகோர்ட்டில், சுற்றுச்சூழலர் ஆர்வலர்கள், வழக்கு தொடுத்தனர்.இதையடுத்து, கடந்த மார்ச்சில், 187 செங்கல் சூளைகளை இயக்கவும், செங்கல் உற்பத்தி செய்யவும், மண்ணை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லவும் தடை விதித்து உத்தரவிடப்பட்டது.

சர்வே பணிஇந்நிலையில், வீரபாண்டி, சோமையம்பாளையம், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை, சின்னதடாகம் ஆகிய பகுதிகளில் செம்மண் அள்ளியது குறித்து, வருவாய் துறை அலுவலர்கள் கடந்த, 20 நாட்களாக, ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.இதில் வீரபாண்டி ஊராட்சி தவிர, மற்ற நான்கு ஊராட்சிகளிலும் செம்மண் அள்ளப்பட்ட விபரங்கள் குறித்து சர்வே எடுத்து முடிக்கப்பட்டுள்ளன.சட்டவிரோதம்அதிக அளவு செங்கல் சூளைகள் உள்ள, வீரபாண்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சர்வே பணி இன்னும் தொடங்கவில்லை. இதனிடையே, வீரபாண்டி பகுதியில் நேற்று மாலை செம்மண் தோண்டப்பட்ட இடங்களை, அரசு அதிகாரிகளிடமிருந்து மறைக்கும் வகையில், அப்பகுதிகளை மண் அள்ளும் இயந்திரங்களைக் கொண்டு, கோர்ட் உத்தரவை மீறி, சமன்படுத்தும் பணியில் சிலர் ஈடுபட்டனர்.தொடரும் கடத்தல்இதுகுறித்து, சுற்றுச்சூழல் ஆர்வலர் கணேசன் கூறுகையில்," ஐகோர்ட் உத்தரவை மீறி, மண்ணை தோண்டவும், சமன்படுத்தும் நடவடிக்கையிலும் வீரபாண்டி ஊராட்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து, மாவட்ட கலெக்டர், வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சின்ன தடாகம் பகுதியில் இருந்து, இரவில், கோவை நகரிலுள்ள பல்வேறு இடங்களுக்கு லோடு ஒன்று, 12 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் லாரிகளில் செம்மண் கடத்திச் செல்லும் பணி தொடர்ந்து நடக்கிறது. இதைத் தடை செய்ய, மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக, சின்ன தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் மண்ணை அள்ளுவது, சமன்படுத்துவதுசட்டவிரோதம். அவ்வாறு செய்வது கண்டறியப்பட்டால், உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.-ரவிச்சந்திரன், கோவை வடக்கு கோட்டாட்சியர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X