பொது செய்தி

தமிழ்நாடு

மகாளய அமாவாசை; மனமுருக வழிபட்ட பக்தர்கள்

Added : அக் 07, 2021
Share
Advertisement
திருப்பூர் : மகாளய அமாவாசையான நேற்று, திருப்பூர் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், பக்தர்கள் வழிபட்டனர்..புரட்டாசி சனிக்கிழமைகளில், கோவில்களில் வழிபட முடியாத பக்தர்கள், நேற்று மகாளய அமாவாசை நாளில், கோவில்களில் தரிசனம் செய்தனர்.திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில், கோட்டை மாரியம்மன் கோவில் உட்பட, திருப்பூர் சுற்றுப்பகுதியில்

திருப்பூர் : மகாளய அமாவாசையான நேற்று, திருப்பூர் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், பக்தர்கள் வழிபட்டனர்..
புரட்டாசி சனிக்கிழமைகளில், கோவில்களில் வழிபட முடியாத பக்தர்கள், நேற்று மகாளய அமாவாசை நாளில், கோவில்களில் தரிசனம் செய்தனர்.திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில், கோட்டை மாரியம்மன் கோவில் உட்பட, திருப்பூர் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், அமாவாசை வழிபாடு நடந்தது.அதிகாலையில், அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன; அதனை தொடர்ந்து, அனுமதிக்கப்பட்ட நேரத்தில், பக்தர்கள் தரிசனம் அனுமதிக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு, விேஷச நாளில் தரிசனம் அனுமதிக்கப்பட்டதால், பக்தர்கள் சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்தபடி வழிபட்டனர்.தமிழகம், கொரோனாவில் கோரப்பிடியில் இருந்து முழுவதும் விடுபட்டு, மக்கள் சுபிட்ஷமாக வாழ வேண்டுமென, பொது வழிபாடு நடந்தது.சிரமப்பட்ட பக்தர்கள்கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையை முன்னிட்டு, அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைப்படி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனத்துக்கு, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், தொற்று தடுப்பு நடவடிக்கையாக, கோவில் வளாகத்தில் திதி கொடுக்க, தர்ப்பனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.இதனால் எங்கே தர்ப்பனம் கொடுப்பது என பக்தர்கள் அலைக்கழிக்கப்பட்டனர். ஒரு வழியாக, மங்கலம் ரோட்டிலுள்ள சுப்பையா சுவாமி திருமடத்தில், தர்ப்பனம் நிகழ்ச்சி நடந்தால், ஏராளமானோர் அங்கு சென்று முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.ஸ்ரீ குருக்ருபா அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுகயைில், 'கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தர்ப்பனம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது,' என்றனர்.அமராவதி கரையில்...வெள்ளகோவில் அருகே அமராவதி ஆற்றங்கரையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்காக தர்ப்பனம் செய்யப்பட்டது. காலை, 9:00 முதல், 12:00 மணி வரை கணபதி ஹோமம் நடத்தப்பட்டு தொடர்ந்து காய்கறி, கீரை, அரிசி, பருப்பு வகைகள் படைக்கப்பட்டு முன்னோர்களுக்கு திதி கொடுக்கப்பட்டது.வெள்ளகோவில் சவுடேஸ்வரி அம்மன் நற்பணி மன்றத்தினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X