சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாகனம் மோதி புள்ளிமான் பலி

Added : அக் 07, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம் : கோத்தகிரி சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், புள்ளி மான் இறந்தது. வாகன விபத்தால் வன உயிரினங்கள் இறப்பதை தடுக்க, வேகத்தடைகள் அமைக்க, வனத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேட்டுப்பாளையம் வனப்பகுதியையும், சிறுமுகை வனப்பகுதியையும், கோத்தகிரி நெடுஞ்சாலை பிரிக்கிறது.இங்குள்ள வனவிலங்குகள், உணவு மற்றும் தண்ணீரை தேடி, சாலையைக் கடந்து இரு
 வாகனம் மோதி புள்ளிமான் பலி


மேட்டுப்பாளையம் : கோத்தகிரி சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், புள்ளி மான் இறந்தது. வாகன விபத்தால் வன உயிரினங்கள் இறப்பதை தடுக்க, வேகத்தடைகள் அமைக்க, வனத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் வனப்பகுதியையும், சிறுமுகை வனப்பகுதியையும், கோத்தகிரி நெடுஞ்சாலை பிரிக்கிறது.இங்குள்ள வனவிலங்குகள், உணவு மற்றும் தண்ணீரை தேடி, சாலையைக் கடந்து இரு வனப்பகுதிகளுக்கும் சென்று வருகின்றன.கோத்தகிரி சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களால், சாலையை கடக்கும் வனவிலங்குகள் மோதி விபத்துக்கு உள்ளாகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில், 10க்கும் மேற்பட்ட மான்கள் வாகனங்களில் அடிபட்டு இறந்துள்ளன.இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:கோத்தகிரி சாலையை, வனவிலங்குகள் அடிக்கடி கடக்கின்றன. ஒரு மான் சாலையைக் கடக்க முயன்றால், அதைத் தொடர்ந்து பத்து, இருபது மான்கள் தொடர்ச்சியாக, சாலையைக் கடக்கும்.அதேபோன்று யானைகள், காட்டு மாடுகள் தண்ணீர் குடிக்க சாலையைக் கடந்து செல்கின்றன.

அப்போது, வேகமாக வரும் வாகனங்கள், வனவிலங்குகளின் மீது மோதுகின்றன.இதில், சில விலங்குகள் பலத்த காயமடைந்தும், சில விலங்குகள் இறந்தும் போகின்றன. நேற்று காலை, நான்கு வயது பெண் புள்ளி மான், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சாலையிலேயே இறந்தது.இவ்வழியாக சென்ற வாகனங்களை, சோதனைச் சாவடி, கண்காணிப்பு கேமரா வாயிலாக கண்டறியும் பணி நடக்கிறது.மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர், கோத்தகிரி சாலையில் மலை அடிவாரத்தில் இருந்து, வனத்துறை சோதனைச் சாவடி வரை, இரண்டு இடங்களில் வேகத்தடை அமைக்க முன்வர வேண்டும்.இவ்வாறு, வனத் துறை அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X