பொது செய்தி

தமிழ்நாடு

பெய்யென பெய்த மழை! இந்தாண்டு இதுவரை 45 நாட்கள்... இலக்கை தாண்டி பொழிய வாய்ப்பு

Added : அக் 07, 2021
Share
Advertisement
திருப்பூர் : நடப்பு ஆண்டில், திருப்பூர் மாவட்டத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு, 45 நாட்கள் மழை பெய்துள்ளதாக, வேளாண் துறை மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், கடந்த 10 ஆண்டுகளில் பெய்த மழை அளவை பொறுத்து, 618.20 மி.மீ., சராசரி மழை அளவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குளிர் பருவத்தில், 14 மி.மீ., பெய்ய வேண்டியது, இந்தாண்டு, 127.96 மி.மீ., மட்டும் பெய்துள்ளது.கோடை பருவத்தில், 135.10 மி.மீ.,


திருப்பூர் : நடப்பு ஆண்டில், திருப்பூர் மாவட்டத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு, 45 நாட்கள் மழை பெய்துள்ளதாக, வேளாண் துறை மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில், கடந்த 10 ஆண்டுகளில் பெய்த மழை அளவை பொறுத்து, 618.20 மி.மீ., சராசரி மழை அளவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குளிர் பருவத்தில், 14 மி.மீ., பெய்ய வேண்டியது, இந்தாண்டு, 127.96 மி.மீ., மட்டும் பெய்துள்ளது.கோடை பருவத்தில், 135.10 மி.மீ., பதிவாக வேண்டியது, 99.44 மி.மீ., அளவுக்கு மழை பெய்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, குளிர் பருத்தில், 13 நாட்களும், கோடையில், 11 நாட்களும் மழை பெய்துள்ளன.தென்மேற்கு பருவத்தில், 154.80 மி.மீ., அளவுக்கு மழை பதிவாக வேண்டும். ஜூன், ஜூலை, ஆக., மாதங்களில், இயல்பு அளவை காட்டிலும் அதிக மழை பெய்ததால், மொத்த மழை அளவு, 155.57 மி.மீ., என பதிவாகியுள்ளது. இருப்பினும், செப்., மாதத்தில், 74 மி.மீ., பெய்ய வேண்டிய மழை, 57.19 மி.மீ., மட்டுமே பதிவாகியுள்ளது.வடகிழக்கு பருவத்தில், அக்., மாதத்தில், 147.70 மி.மீ., அளவுக்கு மழை பெய்ய வேண்டும். கடந்த நான்கு நாட்களில் மட்டும், 65.42 மி.மீ., அளவுக்கு மழை பெய்துள்ளது. ஓராண்டு சராசரி, 618.20 மி.மீ., என்ற நிலையில், நேற்று காலை வரை, 448.39 மி.மீ., அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்புஇதுவரை இல்லாத அளவுக்கு, நேற்று வரை, 45 நாட்கள் மழை பெய்துள்ளது. சில நாள் இடைவெளியில் மழை பெய்ததால், நிலத்தடி நீர் பெருகியுள்ளது.மேலும், இரண்டரை மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும் என்பதால்,

இந்தாண்டும், இலக்கை தாண்டி மழை பெய்யும் என, விவசாயிகள மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'ஓராண்டுக்கான சராசரி மழை பெய்திருந்தாலும் கூட, தேவையில்லாத நேரத்தில் கனமழை பெய்தது, விவசாய பணிகளை வெகுவாக பாதித்தது. பருவம் தவறிய மழையால் பாதிப்பு அதிகரித்துள்ளது.வடகிழக்கு பருவத்தில், மழை சரியான நேரத்தில் கை கொடுத்தால், மானாவாரி சாகுபடியில் பிரச்னை இருக்காது; கால்நடை தீவன உற்பத்தி, மேய்ச்சலில் பிரச்னை இருக்காது,' என்றனர்.ஓராண்டுக்கான சராசரி மழை பெய்திருந்தாலும் கூட, தேவையில்லாத நேரத்தில் கனமழை பெய்தது, விவசாய பணிகளை வெகுவாக பாதித்தது. பருவம் தவறிய மழையால் பாதிப்பு அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X