பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சீட்டு குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தால்? எண்ணுவதற்கு அலுவலர்களுக்கு அறிவுரை

Added : அக் 07, 2021
Share
Advertisement
அன்னுார் : ஓட்டு எண்ணிக்கையின்போது, ஓட்டுப்பெட்டியில், ஓட்டுச்சீட்டுகளின் எண்ணிக்கை, குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தால் என்ன செய்ய வேண்டும் என, பயிற்சி வகுப்பில் தெரிவிக்கப்பட்டது.அன்னுாரில் மாவட்ட கவுன்சிலர் தேர்தல், வரும் 9ம் தேதி நடக்கவுள்ளது. வரும் 12ம் தேதி ஓட்டு எண்ணிக்கை அன்னுார் கே.ஜி., மெட்ரிக் பள்ளியில் நடக்க உள்ளது.ஓட்டு எண்ணுவதற்கு, இரண்டு அறைகளில், தலா ஆறு
 ஓட்டுச்சீட்டு குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தால்?   எண்ணுவதற்கு அலுவலர்களுக்கு அறிவுரை


அன்னுார் : ஓட்டு எண்ணிக்கையின்போது, ஓட்டுப்பெட்டியில், ஓட்டுச்சீட்டுகளின் எண்ணிக்கை, குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தால் என்ன செய்ய வேண்டும் என, பயிற்சி வகுப்பில் தெரிவிக்கப்பட்டது.அன்னுாரில் மாவட்ட கவுன்சிலர் தேர்தல், வரும் 9ம் தேதி நடக்கவுள்ளது.

வரும் 12ம் தேதி ஓட்டு எண்ணிக்கை அன்னுார் கே.ஜி., மெட்ரிக் பள்ளியில் நடக்க உள்ளது.ஓட்டு எண்ணுவதற்கு, இரண்டு அறைகளில், தலா ஆறு மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே சமயத்தில், 12 பெட்டிகள் எண்ண திட்டமிடப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கைக்கு, தலா 24 அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இவர்களுக்கான பயிற்சி வகுப்பு, அன்னுார் ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், தேர்தல் அலுவலர் ரமேஷ்குமார் பேசியதாவது:ஓட்டுப் பெட்டியின் பாதுகாப்பை உறுதி செய்ய, நல்ல நிலையில் உள்ள அரக்கு முத்திரை மற்றும் ஓட்டுப்பெட்டி மீது ஒட்டப்பட்டிருக்கும் ஓட்டுச்சாவடி எண் உள்ளிட்ட விபரங்களை முகவர்களுக்கு காண்பிக்க வேண்டும்.

முத்திரை வெளிப்பக்கத்தில் இருந்து குத்தி சிதைக்கப்பட்டு இருந்தால், உடனே தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். தாள் முத்திரை சேதமடையாமல் திறக்க வேண்டும். ஓட்டுச்சாவடியில் வழங்கப்பட்ட ஓட்டு சீட்டுகளின் எண்ணிக்கையைவிட, ஓரிரு சீட்டுகள் ஓட்டு பெட்டியில் குறைவாக இருந்தால், அதை பொருட்படுத்த தேவையில்லை.மிகுந்த பாதுகாப்பையும் மீறி, சிலர் ஓட்டு சீட்டை வெளியே கொண்டு செல்ல வாய்ப்புள்ளது.

இதற்காக ஓட்டு எண்ணிக்கையை நிறுத்த தேவையில்லை.ஆனால், கூடுதலாக இருந்தால் உடனடியாக முழுமையாக அனைத்து ஓட்டுச் சீட்டுகளையும் ஆய்வு செய்ய வேண்டும். போலி ஓட்டுச் சீட்டுகளை அகற்றிய பின்பே ஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்.இவ்வாறு, ரமேஷ்குமார் பேசினார்.உதவி தேர்தல் அலுவலர் முத்துக்குமாரசாமி பேசுகையில், "குறிப்பிட்ட நேரத்தில் ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு வர வேண்டும்.

முகவர்களிடம் தேவையில்லாமல் பேசக் கூடாது. சந்தேகத்திற்குரிய ஓட்டு சீட்டை அதற்கென உள்ள அறையில் வைக்க வேண்டும். பின்னர் அது குறித்து இரு தரப்பும் முகவர்களையும் வைத்து தேர்தல் அலுவலர் முன்னிலையில் முடிவு செய்ய வேண்டும்" என்றார்.பயிற்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா செல்வம், முத்துராஜ், மற்றும் ஓட்டு எண்ணிக்கை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X