பொது செய்தி

தமிழ்நாடு

இன்றுடன் ஓய்கிறது அனல் பறக்கும் பிரசாரம் இறுதி நாளில் கட்சிகள் 'விறுவிறு'

Added : அக் 07, 2021
Share
Advertisement
உள்ளாட்சி இடைத் தேர்தலுக்கான பிரசாரம், இன்று மாலை 5 மணியுடன், ஓய்கிறது. வரும் 9ம் தேதி தேர்தல் நடக்கிறது.மேட்டுப்பாளையம்காரமடை ஒன்றியத்தில், தேக்கம்பட்டி, பெள்ளாதி, வெள்ளியங்காடு ஆகிய மூன்று ஊராட்சிகளில், வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடக்கிறது.தேக்கம்பட்டி ஊராட்சியில், 15வது வார்டு உறுப்பினர் பதவிக்கு, முத்துக்குமார், சக்திவேல்; பெள்ளாதி ஊராட்சி, 3 வது வார்டு


உள்ளாட்சி இடைத் தேர்தலுக்கான பிரசாரம், இன்று மாலை 5 மணியுடன், ஓய்கிறது. வரும் 9ம் தேதி தேர்தல் நடக்கிறது.மேட்டுப்பாளையம்காரமடை ஒன்றியத்தில், தேக்கம்பட்டி, பெள்ளாதி, வெள்ளியங்காடு ஆகிய மூன்று ஊராட்சிகளில், வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடக்கிறது.

தேக்கம்பட்டி ஊராட்சியில், 15வது வார்டு உறுப்பினர் பதவிக்கு, முத்துக்குமார், சக்திவேல்; பெள்ளாதி ஊராட்சி, 3 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு, அர்ஜுனன், சுரேஷ், தினேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.வெள்ளியங்காடு ஊராட்சியில், 10 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு, சந்திரகலா, கிருஷ்ணன், அஜித்குமார், சுந்தரம், வீரன், முருகம்மாள் ஆகிய 6 பேர் போட்டியிடுகின்றனர்.

பெ.நா.பாளையம்குருடம்பாளையம் ஊராட்சி, 9வது வார்டுக்கு தேர்தல் நடக்கிறது.அருள்ஜோதி நகரில் ஓட்டுச் சாவடி அமைக்கப்படுகிறது. கந்தேஷ், ஜெயராஜ், அருள்ராஜ், கார்த்திக், வைத்தியலிங்கம், ரவிக்குமார், ஆகியோர் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர். அன்னுார்மாவட்ட கவுன்சிலர், 3வது வார்டுக்கான தேர்தல் நடக்கிறது. தி.மு.க.,- அ.தி.மு.க., அ.ம.மு.க., ம.நீ.ம., நாம் தமிழர், தே.மு.தி.க., உள்ளிட்ட ஆறு அரசியல் கட்சி வேட்பாளர்கள், ஐந்து சுயேச்சைகள் என, 11 பேர் களத்தில் உள்ளனர். தி.மு.க., தரப்பில் இரண்டு முறை அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோரும், எம்.எல்.ஏ., செல்வராஜ் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கார்த்திக், ராமச்சந்திரன், அருண்குமார் ஆகியோரும் பிரசாரம் செய்து வருகின்றனர்.

அ.தி.மு.க.,வில் முன்னாள் அமைச்சர் வேலுமணி இரண்டு முறை பிரசாரம் செய்தார். எம்.எல்.ஏ.,க்கள் செல்வராஜ், அருண்குமார், தனபால், கந்தசாமி ஆகியோர் பிரசாரம் செய்து வருகின்றனர். மற்ற கட்சிகளின் அனல் பறக்கும் பிரசாரம் நேற்று நடந்தது.இன்று மாலை 5:00 மணியுடன் பிராசரம் நிறைவடைவதால், இறுதிக்கட்ட பிரசாரம் விறுவிறுப்பாக இருக்கும் என, எதிர்பார்க்கலாம்.
-நமது நிருபர் குழு--

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X