பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி செலுத்த தயக்கம் எதற்கு; கலெக்டர் அறிவுறுத்தல்

Added : அக் 07, 2021
Share
Advertisement
திருப்பூர் : 'பதினெட்டு வயதை கடந்த இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர் தயக்கமின்றி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.அசைவ உணவு சாப்பிட்டாலும் பக்கவிளைவு ஏற்படாது; மாதவிடாய் பிரச்னை இருந்தாலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்,' என, கலெக்டர் வினீத் அறிவுரை வழங்கியுள்ளார்.கலெக்டர் வினீத் அறிக்கை:திருப்பூர் மாவட்டத்தில் அக்., 10ல் மாபெரும் தடுப்பூசி முகாம் நடக்கிறது.


திருப்பூர் : 'பதினெட்டு வயதை கடந்த இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர் தயக்கமின்றி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.அசைவ உணவு சாப்பிட்டாலும் பக்கவிளைவு ஏற்படாது;

மாதவிடாய் பிரச்னை இருந்தாலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்,' என, கலெக்டர் வினீத் அறிவுரை வழங்கியுள்ளார்.கலெக்டர் வினீத் அறிக்கை:திருப்பூர் மாவட்டத்தில் அக்., 10ல் மாபெரும் தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தாத, 18 வயதை கடந்தவர் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கோவிஷீல்டு செலுத்தி, 84 நாட்களுக்கு மேல் ஆனவர், கோவேக் ஷின் செலுத்தி, 28 நாட்கள் கடந்தவர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கும் உணவு முறைக்கும் எந்த தொடர் பும் இல்லை. அசைவ உணவு உட்கொண்டு இருந்தாலும் கோவேக் ஷின், கோவிஷீல்டு தடுப்பூசியை எந்த தயக்கமின்றி, பக்கவிளைவும் இன்றி செலுத்திக் கொள்ளலாம்.பெண்கள் மாதவிடாய் காலங்களிலும் இந்த தடுப்பூசியை செலுத்தலாம். தடுப்பூசி செலுத்தாதவர் அக்., 10ம் தேதி நடக்கும் ஐந்தாம் கட்ட தடுப்பூசி முகாமில் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.கலெக்டர் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X