பொது செய்தி

தமிழ்நாடு

'ஆளும்கட்சி ஜெயிச்சால் தான் நல்லது' பிரசாரத்தில் அமைச்சர் பேச்சு

Added : அக் 07, 2021
Share
Advertisement
அன்னுார் : "உள்ளாட்சியில் ஆளும் கட்சி வெற்றி பெற்றால் தான், மக்களுக்கு பயன் கிடைக்கும்" என, அமைச்சர் கயல்விழி பேசினார்.மாவட்ட கவுன்சிலர் தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் ஆனந்தனை ஆதரித்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி நேற்று பொகலுார், தெலுங்குபாளையம் உள்பட எட்டு இடங்களில் பேசினார். அவர் பேசுகையில்,"தி.மு.க., அரசு பொறுப்பேற்ற ஐந்து மாதங்களில் 505



அன்னுார் : "உள்ளாட்சியில் ஆளும் கட்சி வெற்றி பெற்றால் தான், மக்களுக்கு பயன் கிடைக்கும்" என, அமைச்சர் கயல்விழி பேசினார்.மாவட்ட கவுன்சிலர் தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் ஆனந்தனை ஆதரித்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி நேற்று பொகலுார், தெலுங்குபாளையம் உள்பட எட்டு இடங்களில் பேசினார்.

அவர் பேசுகையில்,"தி.மு.க., அரசு பொறுப்பேற்ற ஐந்து மாதங்களில் 505 வாக்குறுதிகளில், 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. பொதுமக்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரணம், 14 வகை பொருட்கள் இலவசம், அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், வேலைவாய்ப்பில் பெண்களுக்கு ஒதுக்கீடு 30 லிருந்து 40 சதவீதமாக அதிகரிப்பு என, பல சாதனைகளை முதல்வர் செய்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றால் தான் மக்களுக்கு அதிக பயன் கிடைக்கும்" என்றார்.பிரசாரத்தில்,மாவட்ட செயலாளர் பத்மநாபன், தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், ஒன்றிய பொறுப்பாளர் சத்தியமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X