பொது செய்தி

தமிழ்நாடு

அடிச்சுக்கூட கேப்பாங்க...சொல்லிறாதீங்க!

Added : அக் 07, 2021
Share
Advertisement
கோவை : வங்கிக் கணக்கு சார்ந்த விபரங்களை, ரயில்வே அதிகாரிகள் ஒருபோதும் கேட்பதில்லை என்பதால், பயணிகள் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின்(ஐ.ஆர்.சி.டி.சி.,), www.irctc.co.in என்ற இணையதளதில், தினமும் லட்சக்கணக்கானோர் டிக்கெட் முன்பதிவு செய்து ரயில்களில் பயணிக்கின்றனர். இதற்கென, மின்னஞ்சல் முகவரி, மொபைல் போன் எண் உள்ளிட்ட

கோவை : வங்கிக் கணக்கு சார்ந்த விபரங்களை, ரயில்வே அதிகாரிகள் ஒருபோதும் கேட்பதில்லை என்பதால், பயணிகள் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின்(ஐ.ஆர்.சி.டி.சி.,), www.irctc.co.in என்ற இணையதளதில், தினமும் லட்சக்கணக்கானோர் டிக்கெட் முன்பதிவு செய்து ரயில்களில் பயணிக்கின்றனர். இதற்கென, மின்னஞ்சல் முகவரி, மொபைல் போன் எண் உள்ளிட்ட தகவல்களுடன் பயணிகளின், 'யூசர் ஐ.டி.,' உருவாக்கப்படுகிறது.முறைகேடுகளை தவிர்த்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக தற்போது, 'யூசர் ஐ.டி.,' மறுபரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. அதேசமயம், வங்கிக்கணக்கு விபரம்,

ஏ.டி.எம்., எண் உள்ளிட்ட தகவல்களை ரயில்வே அதிகாரிகள் ஒருபோதும் கேட்கமாட்டார்கள் என்பதால், உஷாராக இருக்க பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரிகள் கூறுகையில், 'ரயில்வே, ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரிகள், பயணிகளின் வங்கிக்கணக்கு விபரம், ஏ.டி.எம்., எண், ஒரு முறை கடவு எண்(ஓ.டி.பி.,), பிறந்த தேதி என, எந்த விபரங்களையும் கேட்பதில்லை. எனவே, மோசடி பேர்வழிகளிடம் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இல்லையேல் பணத்தை இழக்க வேண்டியிருக்கும். 'யூசர் ஐ.டி.,'யை, ஓ.டி.பி., எண் கொண்டு அவ்வப்போது மறுபரிசீலனை செய்துகொள்வதும் நல்லது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X