பொது செய்தி

தமிழ்நாடு

நடமாடும் வாகனம் இயக்க விவசாய சங்கம் வலியுறுத்தல் 

Added : அக் 07, 2021
Share
Advertisement
திருப்பூர் : கால்நடைகளுக்கான நடமாடும் வாகனத்தை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் மதுசூதனன், கலெக்டருக்கு அனுப்பிய மனு:கால்நடைத்துறை சார்பில் நடமாடும் மருந்தக வாகனம் கடந்த ஆட்சியில் இயக்கப்பட்டது. இந்த வாகனம் மூலம் உரிய நேரத்தில் இலவச சிகிச்சை, பூச்சி மருந்து, மாத்திரை,

திருப்பூர் : கால்நடைகளுக்கான நடமாடும் வாகனத்தை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் மதுசூதனன், கலெக்டருக்கு அனுப்பிய மனு:கால்நடைத்துறை சார்பில் நடமாடும் மருந்தக வாகனம் கடந்த ஆட்சியில் இயக்கப்பட்டது. இந்த வாகனம் மூலம் உரிய நேரத்தில் இலவச சிகிச்சை, பூச்சி மருந்து, மாத்திரை, மாடுகளுக்கு சினை ஊசி, கோமாரி உட்பட பல நோய்களுக்கு தடுப்பூசி, மருந்து வழங்கப்பட்டது.கல்லாபுரம், சின்னார், கோடந்துார் முதல் ஆண்டியூர் வரை மலைவாழ் மக்கள் வளர்த்தும் கால்நடைகளுக்கு பயன் பெற்று வந்தது. கடந்த இரு மாதமாக நடமாடும் வாகன இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.

அருகிலுள்ள கால்நடை கிளை நிலையங்கள் பூட்டியே இருக்கின்றன.திருப்பூர் உதவி இயக்குனர் அலுவலகத்தில் இரண்டு வாகனம், துணை இயக்குனர் அலுவலகத்தில் ஒரு வாகனம் இயங்காமல் நிறுத்தி வைத்துள்ளனர். மண்டல இணை இயக்குனரிடம் புகார் தெரிவித்தும் பதில் இல்லை. நிறுத்திய வாக னங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X