பொது செய்தி

தமிழ்நாடு

சட்டப்பணி ஆணைக்குழு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : அக் 07, 2021
Share
Advertisement
திருப்பூர் : தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு துவங்கி 25 ஆண்டு நிறைவடைகிறது. இதையொட்டி, திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், 45 நாட்கள் மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதில் நேற்று முன்தினம் மாவட்ட கோர்ட் வளாகத்தில் இலவச சட்ட உதவி மையம் திறக்கப்பட்டது. மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன் திறந்து வைத்தார்.

திருப்பூர் : தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு துவங்கி 25 ஆண்டு நிறைவடைகிறது. இதையொட்டி, திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், 45 நாட்கள் மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் நேற்று முன்தினம் மாவட்ட கோர்ட் வளாகத்தில் இலவச சட்ட உதவி மையம் திறக்கப்பட்டது. மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன் திறந்து வைத்தார். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் யெல்படும் இம்மையத்தில் தினமும் பொதுமக்கள் இலவச சட்ட ஆலோசனை மற்றும் உதவிகள் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வெள்ளி விழா கொண்டாட்டத்தில் நேற்று, திருப்பூர் அரசு மருத்துவமனை சித்தா பிரிவு வளாகத்தில் சட்டப் பணிகள் ஆணைக்குழு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வக்கீல்கள் சாய் பரத் மற்றும் ராஜசேகர் ஆகியோர் விளக்கமளித்தனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வினியோகிக்கப்பட்டது.இன்று பழனியம்மாள் மாநகராட்சி பள்ளியில், மாஜிஸ்திரேட் உதயசூரியா மற்றும் பேனல் வக்கீல் பிரகாஷ் ஆகியோர் பங்கேற்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X