பொது செய்தி

தமிழ்நாடு

அடிக்கடி பூட்டப்படும் அலுலவகம் காத்திருந்து பொதுமக்கள் அதிருப்தி

Added : அக் 07, 2021
Share
Advertisement
அவிநாசி : 'அவிநாசி, போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில், மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வைக்கப்படுகின்றனர்' என்ற புகார் எழுந்துள்ளது.அவிநாசி, கைகாட்டிபுதுார் பகுதியில், அரசு கலைக்கல்லுாரி அருகில், பகுதி நேர வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் செயல்படுகிறது.வாகனங்களுக்கு 'பெர்மிட் ' வழங்குவது தவிர, பழகுனர் உரிமம், ஓட்டுனர் உரிமம், பெயர் மாற்றம் என, அனைத்து

அவிநாசி : 'அவிநாசி, போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில், மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வைக்கப்படுகின்றனர்' என்ற புகார் எழுந்துள்ளது.அவிநாசி, கைகாட்டிபுதுார் பகுதியில், அரசு கலைக்கல்லுாரி அருகில், பகுதி நேர வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் செயல்படுகிறது.வாகனங்களுக்கு 'பெர்மிட் ' வழங்குவது தவிர, பழகுனர் உரிமம், ஓட்டுனர் உரிமம், பெயர் மாற்றம் என, அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இப்பணிகளுக்காக வருவோர், பல நேரங்களில், நீண்ட நேரம் காக்க வைக்கப்படுகின்றனர்; பல நேரங்களில், அலுவலகம் பூட்டி வைக்கப்படுகிறது. இதனால், வேலைக்கு விடுப்பு எடுத்து கொண்டு வருவதால், நேர விரயம் ஏற்படுவதோடு, மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டியுள்ளது' என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இது குறித்து, வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சித்ரா கூறுகையில், ''அனைத்து பணிகளும், 'ஆன்லைன்' மூலம், மேற்கொள்ளப்படுவதால், காலதாமதம் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை. காலதாமதம் ஏற்படுவதாக, சம்மந்தப்பட்டவர்கள் தெரிவித்தால், அதற்கான காரணம் அறியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X