பொது செய்தி

தமிழ்நாடு

நிலம் கையகப்படுத்துவதில் குளறுபடி: கலெக்டரிடம் மனு

Added : அக் 07, 2021
Share
Advertisement
அவிநாசி : வேளாண் துறைக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்துவதில் குளறுபடி இருப்பதாக, புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சி, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகிலுள்ள, 13 சென்ட் நிலம், வேளாண்மை துறைக்கு சொந்தமான கிடங்காக, 50 ஆண்டுகளாக இருந்து வருகிறது. அவிநாசி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு, புதிய கட்டடம் கட்டும் தேவைக்காக, அந்நிலத்தை

அவிநாசி : வேளாண் துறைக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்துவதில் குளறுபடி இருப்பதாக, புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சி, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகிலுள்ள, 13 சென்ட் நிலம், வேளாண்மை துறைக்கு சொந்தமான கிடங்காக, 50 ஆண்டுகளாக இருந்து வருகிறது.

அவிநாசி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு, புதிய கட்டடம் கட்டும் தேவைக்காக, அந்நிலத்தை கையகப்படுத்தும் போது, தனியாரின் ஆக்கிரமிப்பு கண்டறியப்பட்டு, அவற்றை அகற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.ஆனால், அதற்கான நிலத்தை கையகப்படுத்துவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக, தியாகராஜன் என்பவர், கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.அதில், அவர் கூறியிருப்பதாவது:பி.எஸ்.என்.எல்., ஆபீஸ் அருகே ஆக்கிரமிப்பு தொடர்பாசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அறிவுறுத்தலின்படி, வேளாண்மைத்துறை சார்பில், போலீசில் புகார் அளிக்கப்பட்டது.இந்நிலையில், 13 சென்ட் நிலத்தில், தனியார் ஆக்கிரமிப்பு பாதை போக, மீதியிருக்கும், 8 சென்ட் நிலத்தை மட்டும் வகைப்பாடு மாற்றம் செய்து தர இருப்பதாக, வருவாய்த்துறை சார்பில் கூறப்படுகிறது. அரசு நிலத்தை, தனியார் பயன்பாட்டுக்கு வழங்க நினைக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனவே, 13 சென்ட் அரசு நிலம் முழுவதையும், வேளாண்மை துறைக்கு வகைப்பாடு மாற்றம் செய்து, புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X