சையது முஷ்தாக் அலி டி-20 போட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'சையது முஷ்தாக் அலி' டி-20 போட்டி

Added : அக் 07, 2021
Share
கோவை, : தேசிய அளவிலான 'சையது முஷ்தாக் அலி டிராபி'டி-20 போட்டிக்கு, தமிழக அணியில் கோவையை சேர்ந்த நான்கு வீரர்கள் தேர்வாகி உள்ளனர்.இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், தேசிய அளவிலான 'டுவென்டி-20' சாம்பியன்ஷிப் தொடரான சையது முஷ்தாக் அலி டிராபி நடத்தப்படும். இதில், தமிழ்நாடு, டில்லி, மும்பை, கேரளா உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கும். கடந்த முறை தமிழ்நாடு

கோவை, : தேசிய அளவிலான 'சையது முஷ்தாக் அலி டிராபி'டி-20 போட்டிக்கு, தமிழக அணியில் கோவையை சேர்ந்த நான்கு வீரர்கள் தேர்வாகி உள்ளனர்.இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், தேசிய அளவிலான 'டுவென்டி-20' சாம்பியன்ஷிப் தொடரான சையது முஷ்தாக் அலி டிராபி நடத்தப்படும்.

இதில், தமிழ்நாடு, டில்லி, மும்பை, கேரளா உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கும். கடந்த முறை தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வென்றது.தற்போது, இவ்வாண்டுக்கான தமிழக அணி வீரர்களின் பெயர் பட்டியல் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அதில், தினேஷ் கார்த்திக் தலைமையில், 20 பேர் வீரர்கள் தேர்வாகி உள்ளனர்.கோவையை சேர்ந்த ஜெகதீசன், ஹரி நிஷாந்த், கவுசிக், சரவணன்குமார் ஆகிய நான்கு வீரர்கள் தேர்வாகி உள்ளனர்.குறிப்பாக, ஹரி நிஷாந்த், ஜெகதீசன் ஆகியோர் டி.என்.பி.எல்., தொடரில் அதிக ரன்கள் எடுத்தோர் பட்டியலில் முதல் இரண்டு இடங்களையும்; அதிக விக்கெட்களை வீழ்த்தியோர் பட்டியலில் சரவணன்குமார் முதலிடத்தையும் பிடித்தது குறிப்பிடத்தக்கது.வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர், நடராஜன், ஷாரூக்கான், அபராஜித் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் இருப்பதால், தமிழக அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'கடந்த சில ஆண்டுகளாக கோவை வீரர்களின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. டி.என்.பி.எல்., போட்டியில் சிறப்பாக விளையாடியதால், இந்த நான்கு வீரர்கள் தேர்வாகி உள்ளனர்' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X