தீர்க்கப்படாத பிரச்னை... தீர்வுக்கு வழிகாட்டுமா தேர்தல்! எதிர்பார்ப்பில் கருவலூர் ஊராட்சி பொதுமக்கள்| Dinamalar

தமிழ்நாடு

தீர்க்கப்படாத பிரச்னை... தீர்வுக்கு வழிகாட்டுமா தேர்தல்! எதிர்பார்ப்பில் கருவலூர் ஊராட்சி பொதுமக்கள்

Added : அக் 07, 2021
Share
அவிநாசி : தேங்கி கிடக்கும் அடிப்படை பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில், கருவலுார் மக்கள், ஓட்டுப்பதிவுக்கு தயாராகி வருகின்றனர்.அன்னுாருக்கும், அவிநாசிக்கும் இடைபட்ட பகுதியில், மாநில நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கருவலுாரில், 3,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன; மக்கள் தொகை, 10 ஆயிரத்துக்கு அதிகம். கொங்கு மண்டலத்தில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில், இந்த


அவிநாசி : தேங்கி கிடக்கும் அடிப்படை பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில், கருவலுார் மக்கள், ஓட்டுப்பதிவுக்கு தயாராகி வருகின்றனர்.அன்னுாருக்கும், அவிநாசிக்கும் இடைபட்ட பகுதியில், மாநில நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கருவலுாரில், 3,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன;

மக்கள் தொகை, 10 ஆயிரத்துக்கு அதிகம். கொங்கு மண்டலத்தில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில், இந்த ஊரின் பெருமை.ஊராட்சி தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல், வரும், 9ல் நடக்கிறது. கருவலூர், நைனாம்பாளையம், அரசப்பம்பாளையம், காளிபாளையம், எலச்சிபாளையம், ஆரியகவுண்டம்பாளையம், அனந்தகிரி, மருதுார் என, பல பகுதிகள் உள்ளன. மொத்தம், 5,122 வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.பயனற்ற கட்டடங்கள்கருவலூரில் மக்கள் தொகை, வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்ட நிலையில், புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். கதர் வாரியத்துக்கு சொந்தமான விசாலாமான கட்டடங்கள் பயனற்று, வெறுமனே பூட்டிக்கிடக்கின்றன. அவற்றை மாற்று பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சி எடுக்கப்பட வேண்டும் என்பது, நீண்ட நெடுநாளைய கோரிக்கை.'வேளாண் துறைக்கு சொந்தமான அலுவலர் குடியிருப்பு கட்டடம், பயன்படுத்தப்படாமல் இருப்பதால், அங்கு, மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் பலர் ஈடுபடுகின்றனர்' என்பது, அவ்வப்போது எழும் புகார்.சுகாதாரம் கேள்விக்குறிஊராட்சி பகுதிகளில் உள்ள வீடு, கடைகளில் இருந்து வெளியேறும் குப்பைகளை தாம் பிரித்து, திடக்கழிவு மேலாண்மை செய்வதற்குரிய கட்டமைப்பு அங்கில்லை. குப்பை கொட்ட பிரத்யேக இடம் இல்லாததால், பொதுப்பணி துறைக்கு சொந்தமான குளத்தில் தான் குப்பை, கழிவுகள கொட்டப்படுகின்றன.'இத்தகைய செயலில் ஈடுபடக்கூடாது; இது. அத்துமீறல்' என, பொதுப்பணித்துறையினர் அவ்வப்போது எச்சரித்தாலும், மாற்று ஏற்பாடு செய்து கொள்வதில், ஊராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தவில்லை.

சாலைகள் காடுமுரடு'குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் வினியோகிக்கப்படும் தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. நீர்நிலை பராமரிப்பு என்பது, சுத்தமாக இல்லை,' எனக்கூறும் மக்கள் 'ஆங்காங்கே உள்ள குளம், குட்டைகள் தூர்வாரப்பட வேண்டும். பல வீதி ரோடுகளில் போடப்பட்ட தார், சிமென்ட் கான்கிரீட் பெயர்ந்து, கரடு முரடாக மாறியுள்ளது.சரியான திட்டமிடல், வடிவமைப்புடன் சாக்கடை கால்வாய் கட்டப்படாததால், ஆங்காங்கே குப்பை அடைபடுகின்றன. போதியளவில், தெரு விளக்கு இல்லாததால், பல இடங்கள் இருளில் மூழ்கியுள்ளன, என்பதும் மக்களின் குமுறல்.ஊராட்சி மூலம் வழங்கப்பட வேண்டிய சான்று, அனுமதி விண்ணப்பம், கட்டட அனுமதி போன்றவற்றை பெறுவதில், பல நேரங்களில் தாமதம் ஏற்ப டுகிறது என்பது, மக்களின் பிரதான குற்றச்சாட்டு.பல்வேறு பிரச்னைகளை உள்ளடக்கிய கருவலுாரில், உட்கட்டமைப்பு, வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டிய பொறுப்பு, புதிதாக தேர்வு செய்யப்படவுள்ள

ஊராட்சி தலைவருக்கு உண்டு.ரோடுகளில், சிமென்ட் கான்கிரீட் பெயர்ந்து, கரடு முரடாக மாறியுள்ளது. சரியான திட்டமிடல், வடிவமைப்புடன் சாக்கடை கால்வாய் கட்டப்படாததால், ஆங்காங்கே குப்பை அடைபடுகின்றன.குப்பை கொட்ட பிரத்யேக இடம் இல்லாததால், பொதுப்பணி துறைக்கு சொந்தமான குளத்தில் தான் குப்பை, கழிவுகள் கொட்டப்படுகின்றன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X