பொது செய்தி

தமிழ்நாடு

வள்ளலார் பிறந்த நாள் அகவல் பாராயண வழிபாடு காதுகேளாதோர் கிரிக்கெட் சென்னை அணிக்கு கோப்பை

Added : அக் 07, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில், வள்ளலார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.வள்ளலாரின் பிறந்த நாளான, அக்., 5ல், திருப்பூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில், நேற்று முன்தினம் சிறப்பு வழிபாடு நடந்தது. காலை, 11:00 மணிக்கு, சன்மார்க்க சங்க தலைவர் நீரணி பவளக்குன்றன் தலைமையில் விழா நடந்தது. அகவல் பாராயணமும், ஒளி வழிபாடும், கருத்தரங்கமும்

திருப்பூர் : திருப்பூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில், வள்ளலார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

வள்ளலாரின் பிறந்த நாளான, அக்., 5ல், திருப்பூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில், நேற்று முன்தினம் சிறப்பு வழிபாடு நடந்தது. காலை, 11:00 மணிக்கு, சன்மார்க்க சங்க தலைவர் நீரணி பவளக்குன்றன் தலைமையில் விழா நடந்தது. அகவல் பாராயணமும், ஒளி வழிபாடும், கருத்தரங்கமும் நடந்தது.முன்னாள் தலைவர் ராமசாமி, வள்ளலாரின் கருணை, அன்பு, ஒளிவழிபாடு குறித்து பேசினார். ஒளி வழிபாட்டுக்கு பிறகு, அன்னதானம் வழங்கப்பட்டது. பொருளாளர் ஜீவானந்தம் நன்றி கூறினார்.முன்னதாக, வள்ளலார் பிறந்த நாள், தனிப்பெரும் கருணை நாளாக கடைபிடிக்கப்படும் என, தமிழக முதல்வர் அறிவித்துள்ளதற்கு, நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.திருப்பூர், அக். 7-

திருப்பூரில் நடந்த மாநில காதுகேளாதோர் கிரிக்கெட் போட்டியில், சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.மாநில காதுகேளாதோர் கிரிக்கெட் சங்கம், விக்கி லேபிள்ஸ் அண்ட் டிரேடர்ஸ் சார்பில் புதிய திருப்பூர், பச்சாபாளையம், எஸ்.கே.எல்., பப்ளிக் பள்ளியில், காதுகேளாதோர் 20 - 20 கிரிக்கெட் மாநில போட்டி மூன்று நாட்கள் நடந்தது.சேலம், சென்னை, மதுரை, திருச்சி, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய ஆறு மாவட்ட அணி வீரர்கள் பங்கேற்றனர். 'நாக்- அவுட்' முறையில் போட்டி நடந்தது.

சென்னை - மதுரை அணிகளுக்கு இடையே இறுதி போட்டி நடந்தது. 18.3 ஓவர் முடிவில் மதுரை அணி பத்து விக்கெட்டுகளை இழந்து, 76 ரன் எடுத்தது. இலக்கை விரட்டிய சென்னை அணி, நான்கு விக்கெட் இழப்புக்கு, 79 ரன் எடுத்து வெற்றி பெற்றது. தொடர் நாயகன் விருதை திருச்சி அணியின் ராஜேஷ் பெற்றார். திருப்பூர் உதவி கலெக்டர் (பயிற்சி) அப்தாப் ரசூல் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை மற்றும், 25 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கி பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X