பொது செய்தி

தமிழ்நாடு

கதர் ஆடையில் அணிவகுப்பு ஆசிரியர், ஆசிரியைகள் அசத்தல்

Added : அக் 07, 2021
Share
Advertisement
கோவை : கோவை ஏ.ஜே.கே., கல்லுாரியில் ஆடை வடிவமைப்பியல் துறை மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில்,காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கதர் ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.பொதுவாகவே ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி, மாணவர்களுக்கே கல்லுாரிகளில் நடத்தப்படும். இக்கல்லுாரியில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆசிரியர்கள் வண்ண வண்ண நிறங்களில், கதர் புடவைகளில் அணிவகுப்பில்

கோவை : கோவை ஏ.ஜே.கே., கல்லுாரியில் ஆடை வடிவமைப்பியல் துறை மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில்,காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கதர் ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.பொதுவாகவே ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி, மாணவர்களுக்கே கல்லுாரிகளில் நடத்தப்படும்.

இக்கல்லுாரியில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆசிரியர்கள் வண்ண வண்ண நிறங்களில், கதர் புடவைகளில் அணிவகுப்பில் பங்கேற்றனர்.காந்தியடிகளின் கதர் ஆடை கொள்கையை வலியுறுத்தி, வினாடி வினா போட்டியும் நடத்தப்பட்டது. ஆடை அணிவகுப்பு, வினாடி வினா போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு, பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. வயது வேறுபாடு இன்றி, இருபாலர் ஆசிரியர்களும் இதில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X