பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி சுவர்களில், சித்திரங்கள் 'பேசுகின்றன' மாநகராட்சி சுவர்களில், சித்திரங்கள் 'பேசுகின்றன'

Added : அக் 07, 2021
Share
Advertisement
திருப்பூர் : அரசு அலுவலக சுவர்கள் அழகுபடுத்தும் வகை யில், மாநகராட்சி அலுவலக சுற்றுச் சுவரில் ஓவியங்கள் வரையும் பணி நடைபெறுகிறது.அனைத்து பகுதிகளிலும் அரசு கட்டடங்கள் மற்றும் அதன் சுவர்களில் தனி நபர் மற்றும் அமைப்புகளின் விளம்பரங்கள், போஸ்டர்கள், சினிமா போஸ்டர்கள் ஒரு காலத்தில் இடம் பிடித்திருந்தன.அலங்கோலமாக மாறிய சுவர்கள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தின.

திருப்பூர் : அரசு அலுவலக சுவர்கள் அழகுபடுத்தும் வகை யில், மாநகராட்சி அலுவலக சுற்றுச் சுவரில் ஓவியங்கள் வரையும் பணி நடைபெறுகிறது.

அனைத்து பகுதிகளிலும் அரசு கட்டடங்கள் மற்றும் அதன் சுவர்களில் தனி நபர் மற்றும் அமைப்புகளின் விளம்பரங்கள், போஸ்டர்கள், சினிமா போஸ்டர்கள் ஒரு காலத்தில் இடம் பிடித்திருந்தன.அலங்கோலமாக மாறிய சுவர்கள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தின. இதையடுத்து அரசு கட்டடங்களிலும், சுவர்களிலும் இது போன்ற விளம்பரங்கள் எழுதுவது, போஸ்டர் ஒட்டுவது போன்றவை தடை செய்யப்பட்டன.

அதன் பின் இந்த சுவர்களில் அரசு விளம்பரங்கள், திட்டங்கள் குறித்த அறிவிப்புகள், சுகாதார விழிப்புணர்வு வாசகம் உள்ளிட்டவை இடம் பெற்றன.அவ்வகையில் தற்போது திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலக சுற்றுச்சுவரில் பல்வேறு ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள ஆண்டிபாளையம் குளம், திருப்பூர் நகரின் வளர்ச்சிக்கு காரணமான பின்னலாடை தொழிலின் பல்வேறு அம்சங்கள் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன.

இந்த ஓவியங்கள் பார்ப்போரை திருப்பூர் நகரின் சிறப்பை அறிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளன.மாநகராட்சிக்குச் சொந்தமான அனைத்து கட்டடங்களிலும் இது போன்ற ஓவியம் வரையப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X