பொது செய்தி

தமிழ்நாடு

சுழற்கோப்பை போட்டிகள் வேளாண் பல்கலையில் அறிமுகம் 

Added : அக் 07, 2021
Share
Advertisement
கோவை : தமிழ்நாடு வேளாண் பல்கலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினரால், 75வது சுதந்திர தினம், 'ஆசாதிகா அம்ரித் மகோத்சவ்' என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. இதில், 'தேசிய பேரிடர் மீட்பு படையின் சுழற்கோப்பை' அறிமுகப்படுத்தப்பட்டது.டில்லி தேசிய பேரிடர் மீட்பு குழுவால், 75வது சுதந்திர தினம் பல்வேறு வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாணவர்களின் தனித்திறனை

கோவை : தமிழ்நாடு வேளாண் பல்கலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினரால், 75வது சுதந்திர தினம், 'ஆசாதிகா அம்ரித் மகோத்சவ்' என்ற பெயரில் கொண்டாடப்பட்டது.

இதில், 'தேசிய பேரிடர் மீட்பு படையின் சுழற்கோப்பை' அறிமுகப்படுத்தப்பட்டது.டில்லி தேசிய பேரிடர் மீட்பு குழுவால், 75வது சுதந்திர தினம் பல்வேறு வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்தும் நோக்கில், சுழற்கோப்பை போட்டிகள் வேளாண் பல்கலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.ஆண்டுதோறும், சுதந்திர தினத்தன்றுபோட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு சுழற்கோப்பை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.சுதந்திர தினத்தை மையமாக கொண்டு கவிதை, கட்டுரை, ஓவியம், பேச்சு, வினாடிவினா என்ற பிரிவில் நடத்தப்பட்டு, சிறப்பாக திறன்களை வெளிப்படுத்திய அணிக்கு, சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ், ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.பல்கலை துணைவேந்தர் குமார், தேசிய பேரிடர் மீட்பு படை நிர்வாக இயக்குனர் பிரதான், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படை தளபதி ரேகா, துணை தளபதி ராஜன் பாலு, டீன்கள் ரகுசந்தர், கல்யாணசுந்தரம், ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X