பொது செய்தி

தமிழ்நாடு

திருச்செந்தூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை! கேட்கின்றனர் கோவை மளிகை வியாபாரிகள்

Added : அக் 07, 2021
Share
Advertisement
கோவை : பொள்ளாச்சி வழியாக திருச்செந்துாருக்கு இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில்சேவையை துவக்க வேண்டும் என்று, கோயமுத்துார் மளிகை வியாபாரிகள் சங்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோயமுத்துார் மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தின் 83வது மகா சபைக் கூட்டம் மளிகை வியாபாரிகள் சங்க அரங்கில் நடந்தது. தலைவர் கணேசன் தலைமை வகித்தார். பொது செயலாளர் அப்துல்ரஹ்மான் சேட் முன்னிலை


கோவை : பொள்ளாச்சி வழியாக திருச்செந்துாருக்கு இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில்சேவையை துவக்க வேண்டும் என்று, கோயமுத்துார் மளிகை வியாபாரிகள் சங்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோயமுத்துார் மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தின் 83வது மகா சபைக் கூட்டம் மளிகை வியாபாரிகள் சங்க அரங்கில் நடந்தது. தலைவர் கணேசன் தலைமை வகித்தார். பொது செயலாளர் அப்துல்ரஹ்மான் சேட் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:தென் மாவட்டங்களிலிருந்து, கோவை வந்து வர்த்தகம் செய்யும் வியாபாரிகளுக்காக கோவையிலிருந்து பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை மார்க்கமாக திருச்செந்துாருக்கு இரவு நேர எக்ஸ்பிரஸ் சேவையை துவங்க வேண்டும். டி.கே.மார்க்கெட்டில் பழுதடைந்து காணப்படும் தென்வடல் சாலையை சரிசெய்ய வேண்டும். எடைபார்க்கும் தராசை இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை, சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.உணவு பாதுகாப்பு தரநிர்ணய சட்டத்தில், வணிகர்கள் ஆண்டுக்கு ஒரு முறை உரிமம் போல ஒரு முறை மட்டுமே எடுக்க முறைப்படுத்த வேண்டும். மாநகராட்சி கடைகளுக்கான வாடகைக்கு போடப்படும் வட்டியை முற்றிலும் நீக்க வேண்டும். டி.கே.மார்க்கெட்டில் பல ஆண்டுகளாக வணிகம் செய்து வரும் வணிகர்களுக்கு, ஒதுக்கீடு செய்து கொடுத்த கடைகளை அவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் பங்குதாரர்களின் பெயருக்கு வாடகை உரிமத்தை மாற்றம் செய்து கொடுக்க வேண்டும்.இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திரளான வியாபாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X