வெள்ளலூரில் சிக்கியது: 600 கிலோ ரேஷன் அரிசி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெள்ளலூரில் சிக்கியது: 600 கிலோ ரேஷன் அரிசி

Added : அக் 07, 2021
Share
வெள்ளலூர் : வெள்ளலூரில் வெங்கடாசல கோனார் வீதியிலுள்ள ஒரு சந்தில் நேற்று முன்தினம் 12 மூட்டைகள்கேட்பாரற்று கிடந்தது. அப்பகுதியினர் மதுக்கரை வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். தனி வருவாய் ஆய்வாளர் (குடிமைப் பொருள்) சசிகுமாருடன் அங்கு சென்ற அலுவலர், மூட்டைகளை சோதனை செய்தார். தலா, 50 கிலோ வீதம், 600 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது. அப்பகுதியினரிடம்

வெள்ளலூர் : வெள்ளலூரில் வெங்கடாசல கோனார் வீதியிலுள்ள ஒரு சந்தில் நேற்று முன்தினம் 12 மூட்டைகள்கேட்பாரற்று கிடந்தது.

அப்பகுதியினர் மதுக்கரை வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். தனி வருவாய் ஆய்வாளர் (குடிமைப் பொருள்) சசிகுமாருடன் அங்கு சென்ற அலுவலர், மூட்டைகளை சோதனை செய்தார். தலா, 50 கிலோ வீதம், 600 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது. அப்பகுதியினரிடம் விசாரித்ததில், முரளி என்பவர் அரிசி மூட்டைகளை சேகரித்து வைத்ததும், மக்கள் பார்த்ததை அடுத்து தப்பியோடியதும் தெரியவந்தது. அரிசி மூட்டைகள், வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அலுவலர் ரமேஷ்குமார் பொள்ளாச்சி குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தியிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் முரளியை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X