பொது செய்தி

தமிழ்நாடு

தந்தையை ஏமாற்றிய மகன்கள்

Added : அக் 07, 2021
Share
Advertisement
திருப்பூர் : வீட்டை ஏமாற்றி பறித்துக்கொண்டு, முதியவரை வீதியில் நிற்க வைத்த மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.திருப்பூர், பிச்சம்பாளையம், பாரதி நகரை சேர்ந்தவர் நாச்சிமுத்து, 85; இவருக்கு, இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.இவரது மகன் ஒருவர், வங்கியில் கடன் வாங்க, கையெழுத்து தேவையென வாங்கி, தாயம்மாள் லே -அவுட்டில் இருந்த

திருப்பூர் : வீட்டை ஏமாற்றி பறித்துக்கொண்டு, முதியவரை வீதியில் நிற்க வைத்த மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர், பிச்சம்பாளையம், பாரதி நகரை சேர்ந்தவர் நாச்சிமுத்து, 85; இவருக்கு, இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.இவரது மகன் ஒருவர், வங்கியில் கடன் வாங்க, கையெழுத்து தேவையென வாங்கி, தாயம்மாள் லே -அவுட்டில் இருந்த வீட்டை தானசெட்டில்மென்ட் பெற்றுக்கொண்டார்.அதன்பின், நாச்சிமுத்துவை வெளியேற்றி, உணவு, உடை கொடுக்காமல் துன்புறுத்தி வந்துள்ளனர். கடந்த, ஆறு ஆண்டுகளாக வீதியில் வசித்து வரும் நாச்சிமுத்துவுக்கு, எவ்வித ஆதரவும் கிடைக்கவில்லை. மீண்டும் இதுகுறித்து மின்வாரிய தொ.மு.ச., நிர்வாகி சரவணன் மூலம், கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர்.அந்த மனுவில், 'மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டப்படி, நாச்சிமுத்துவுக்கு சொந்தமான வீட்டை மீட்டுத்தர வேண்டும். தான செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்ய வேண்டுவும். அவர் தனது வீட்டில் பாதுகாப்பாக வசிக்க வழிவகை செய்ய வேண்டும். பெற்றோரை கைவிட்ட மகன்களுக்கு, உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்,' என்று தெரிவித்துள்ளனர்.மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் வினீத், ஆர்.டி.ஓ.,மூலம் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X