பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி செலுத்தியவர் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்குகிறது

Added : அக் 07, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தியவர் எண்ணிக்கை, 19.61 லட்சமாக உள்ளது. இவ்வார இறுதிக்குள், 20 லட்சத்தை எட்டுமென சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.திருப்பூர் மாவட்டத்தில் நேற்று நிலவரப்படி, 19 லட்சத்து, 61 ஆயிரத்து, 702 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதிக பட்சமாக, 18 வயதை கடந்த, 11 லட்சத்து, 77 ஆயிரத்து, 478 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 45 வயதை கடந்த,

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தியவர் எண்ணிக்கை, 19.61 லட்சமாக உள்ளது. இவ்வார இறுதிக்குள், 20 லட்சத்தை எட்டுமென சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று நிலவரப்படி, 19 லட்சத்து, 61 ஆயிரத்து, 702 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதிக பட்சமாக, 18 வயதை கடந்த, 11 லட்சத்து, 77 ஆயிரத்து, 478 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 45 வயதை கடந்த, ஐந்து லட்சத்து, 10 ஆயிரத்து, 682 பேரும், 60 வயதை கடந்த, இரண்டு லட்சத்து, 73 ஆயிரத்து, 542 பேரும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.மொத்தம் தடுப்பூசி செலுத்திய, 19.61 லட்சம் பேரில் 19 லட்சத்து, 23 ஆயிரத்து, 352 பேர் ஆண்கள்; ஒன்பது லட்சத்து, 38 ஆயிரத்து, 031 பேர் பெண்கள். முதல் தவணையை தடுப்பூசியை, 15.51 லட்சம் பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை, 4.10 லட்சம் பேரும் செலுத்தி உள்ளனர்.வரும் 10ல் மீண்டும் முகாம்!மாவட்டத்தில் இதுவரை நடந்த நான்கு சிறப்பு முகாமில், மூன்று லட்சத்து, 68 ஆயிரத்து, 562 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.வரும் அக்., 10ல் ஐந்தாம் கட்ட தடுப்பூசி முகாம் திருப்பூர் மாநகராட்சி மற்றும் மாவட்டம் முழுதும் சுகாதாரத்துறை சார்பில் நடக்கவுள்ளது.இதுவரை தடுப்பூசி செலுத்தாத, 18 வயதை கடந்தவருக்கு முகாமில் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இவ்வார இறுதிக்குள் மாவட்டத்தில், 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தடுப்பூசி செலுத்திய, 19.61 லட்சம் பேரில் 19 லட்சத்து, 23 ஆயிரத்து,352 பேர் ஆண்கள்; ஒன்பது லட்சத்து, 38 ஆயிரத்து, 031 பேர் பெண்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X