இடம் மாறாத மதுக்கடை; இடம் மாறியதாக தி.மு.க., பேனர் குட்டையை குழப்பும் கட்சியினர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இடம் மாறாத மதுக்கடை; இடம் மாறியதாக தி.மு.க., பேனர் குட்டையை குழப்பும் கட்சியினர்

Added : அக் 07, 2021
Share
திருப்பூர்: காலேஜ் ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை அகற்றப்பட்டதாக தி.மு.க.,வினர் வைத்த பேனரால் குழப்பம் ஏற்பட்டது.திருப்பூர், காலேஜ் ரோடு, கொங்கணகிரி பஸ் ஸ்டாப் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை எண் 1907 உள்ளது. பொதுமக்களுக்கு பல்வேறு விதங்களில் இடையூறாக உள்ளது. இதனை அகற்ற வேண்டும் என பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தினர்.மாவட்ட நிர்வாகம் முதல்


திருப்பூர்: காலேஜ் ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை அகற்றப்பட்டதாக தி.மு.க.,வினர் வைத்த பேனரால் குழப்பம் ஏற்பட்டது.திருப்பூர், காலேஜ் ரோடு, கொங்கணகிரி பஸ் ஸ்டாப் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை எண் 1907 உள்ளது.

பொதுமக்களுக்கு பல்வேறு விதங்களில் இடையூறாக உள்ளது. இதனை அகற்ற வேண்டும் என பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தினர்.மாவட்ட நிர்வாகம் முதல் முதல்வர் தனிப்பிரிவு வரை சென்ற புகார்கள் அனைத்தும் எந்த நடவடிக்கையும் இன்றி கிடப்பில் போடப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன், எம்.எல்.ஏ.,விடம் மனு அளிக்கப்பட்டது.இரு நாளில் கடந்த 4ம் தேதி கடைசியாக பா.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நேற்று பொதுமக்கள் சார்பில் கடையை அகற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், போலீசார் பாதுகாப்பு பணிக்கு வந்தனர்.கடைக்கு முன், தி.முக. வார்டு கிளை சார்பில், '10 ஆண்டாக மாற்ற முடியாத மதுக்கடையை, மனு கொடுத்த 10 நாளில் அகற்றிக் கொடுத்தஎம்.எல்.ஏ.வுக்கு நன்றி' என்ற வாசகத்துடன் ஒரு பேனரும், '8ம் தேதியுடன் கடையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்த எம்.எல்.ஏ.வுக்கு நன்றி' என ஒரு பேனரும் இருந்தது.இதனை பார்த்த பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் குழப்பம் ஏற்பட்டது. நீண்ட நேரம் காத்திருந்தும் ஆர்ப்பாட்டத்துக்கு யாரும் வரவில்லை என போலீசார் புறப்பட்டனர். மதுக்கடை இடமாற்றம் குறித்து விவரம் பெற 'டாஸ்மாக்' மாவட்ட மேலாளரை பலமுறை தொடர்பு கொண்டும் அவர் மொபைல் அழைப்பை ஏற்கவில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X