ஐம்பொன் சிலைகள் திருட்டு நெய்வேலியில் துணிகரம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஐம்பொன் சிலைகள் திருட்டு நெய்வேலியில் துணிகரம்

Added : அக் 07, 2021
Share
நெய்வேலி-நெய்வேலியில் அம்மன் கோவில் பூட்டை உடைத்து,இரண்டு ஐம்பொன் சிலைகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடலுார் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் வட்டம், 21ல் பிரசித்தி பெற்ற சிவகாமி அம்மன் கைலாசநாதர் கோவில் உள்ளது. கடந்த மூன்று நாட்களாக பூஜை செய்யும் தீட்சிதர் வராததால் கோவில் மூடி கிடந்தது.நேற்று காலை வந்த தீட்சிதர் கோவிலின் வெளிப்புற கதவு திறந்து

நெய்வேலி-நெய்வேலியில் அம்மன் கோவில் பூட்டை உடைத்து,இரண்டு ஐம்பொன் சிலைகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடலுார் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் வட்டம், 21ல் பிரசித்தி பெற்ற சிவகாமி அம்மன் கைலாசநாதர் கோவில் உள்ளது. கடந்த மூன்று நாட்களாக பூஜை செய்யும் தீட்சிதர் வராததால் கோவில் மூடி கிடந்தது.நேற்று காலை வந்த தீட்சிதர் கோவிலின் வெளிப்புற கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, கருவறையின் பூட்டு உடைக்கப்பட்டு மூலவர்களான சிவகாமி அம்மன்மற்றும் சிவன் சுவாமிகளின் ஐம்பொன் சிலைகள், ஒரு சவரன் தங்க காசு திருடு போயிருப்பது தெரிய வந்தது.கோவில் நிர்வாகி அளித்த புகாரின் பேரில், நெய்வேலி,தெர்மல் இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த துணிகர சம்பவம் நெய்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X