சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயிலில் அடிபட்டு இறந்தவர் சடலத்தை எரிக்க முயற்சி

Added : அக் 07, 2021
Share
Advertisement
விருத்தாசலம்-ரயிலில் அடிபட்டு இறந்தவரின் சடலத்தை, போலீசாருக்கு தெரியாமல் உறவினர்கள் எரிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடி காலனியைச் சேர்ந்தவர் கொளஞ்சி மகன் வினாயகமூர்த்தி, 25. விருத்தாசலம் - சென்னை ரயில் பாதையில் நேற்று காலை இறந்து கிடந்தார்.இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல், உறவினர்கள், அவரது
 ரயிலில் அடிபட்டு இறந்தவர் சடலத்தை எரிக்க முயற்சி

விருத்தாசலம்-ரயிலில் அடிபட்டு இறந்தவரின் சடலத்தை, போலீசாருக்கு தெரியாமல் உறவினர்கள் எரிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடி காலனியைச் சேர்ந்தவர் கொளஞ்சி மகன் வினாயகமூர்த்தி, 25. விருத்தாசலம் - சென்னை ரயில் பாதையில் நேற்று காலை இறந்து கிடந்தார்.இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல், உறவினர்கள், அவரது சடலத்தை எரிக்க முயன்றனர். இதையறிந்த, ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுமித், விருத்தாசலம் இருப்பு பாதை சப் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சடலத்தை கைப்பற்றி, விருத்தாசலம் மருத்துவமனைக்கு அனுப்பினர்.ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து, வினாயகமூர்த்தி கொலை செய்யப்பட்டாரா;அல்லது வேறு ஏதேனும் பிரச்னையா என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X