பொது செய்தி

தமிழ்நாடு

ஆரோவில் பகுதிக்கு விடுமுறை

Added : அக் 07, 2021
Share
Advertisement
வானுார்-உள்ளாட்சித் தேர்தலையொட்டி, சர்வதேச நகரமான ஆரோவில் மாத்திரி மந்திர் மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் சென்றனர்.விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. தேர்தலையொட்டி அனைத்து தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுக்கும் அரசு விடுமுறை அளிக்கப்பட்டது.வானுார் ஒன்றியத்தில் நேற்று நடந்த உள்ளாட்சித் தேர்தலையொட்டி,

வானுார்-உள்ளாட்சித் தேர்தலையொட்டி, சர்வதேச நகரமான ஆரோவில் மாத்திரி மந்திர் மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் சென்றனர்.விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. தேர்தலையொட்டி அனைத்து தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுக்கும் அரசு விடுமுறை அளிக்கப்பட்டது.வானுார் ஒன்றியத்தில் நேற்று நடந்த உள்ளாட்சித் தேர்தலையொட்டி, சர்வதேச நகரமான ஆரோவில் நிர்வாகமும் அனைத்து நிறுவனத்திற்கும் விடுமுறை அளித்தது.இதையொட்டி, சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வரும், ஆரோவில் மாத்திர் மந்திர், பாரத் நிவாஸ், பார்வையாளர் மையங்கள் மூடப்பட்டன.இதை அறியாமல் வந்த வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X