பொது செய்தி

தமிழ்நாடு

5,000 ஆண்டு பாறை ஓவியங்கள்

Added : அக் 07, 2021
Share
Advertisement
விழுப்புரம்-செத்தவரை மலையில் 5,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.திருவண்ணாமலை மரபுசார் அமைப்பைச் சேர்ந்த ராஜ் பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர், விழுப்புரம் மாவட்டம், செத்தவரை மலையில் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு ஆவணம் செய்யப்படாத புதிய பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.இது குறித்து ராஜ் பன்னீர்செல்வம் கூறியதாவது:செத்தவரை

விழுப்புரம்-செத்தவரை மலையில் 5,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.திருவண்ணாமலை மரபுசார் அமைப்பைச் சேர்ந்த ராஜ் பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர், விழுப்புரம் மாவட்டம், செத்தவரை மலையில் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு ஆவணம் செய்யப்படாத புதிய பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.இது குறித்து ராஜ் பன்னீர்செல்வம் கூறியதாவது:செத்தவரை மலையில் கும்பசுனை என்ற இடத்தில் உள்ள பெரிய பாறையில் இரண்டு இடங்களில் செஞ்சாந்து மற்றும் வெண்சாந்து ஓவியம் உள்ளது.பாறையின் ஒரு முனையில் உள்ள ஓவியத்தில் மான் மற்றும் யானை போன்ற உருவம் காணப்படுகிறது. மற்றொரு முனையில் செஞ்சாந்து ஓவியத்தில் இரு மனிதர்கள் மட்டும் உள்ளனர்.மேலும், இரண்டு இடங்களில் வெண்சாந்தில் மனிதர்கள் இருப்பது போன்று வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியங்கள் இங்கு வாழ்ந்த மனிதர்கள் மற்றும் விலங்குகளின் வேட்டை காட்சிகளை சித்தரிக்கின்றது. இவை புதிய கற்காலத்தை சேர்ந்த ஓவியங்களாக கருதலாம்.செத்தவரை ஓவியம் மற்றும் செத்தவரைப் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்த ஏராளமான சான்றுகள் ஆவணம் செய்யப்பட்டுள்ளது. இதன் காலம் 5,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.இவ்வாறு ராஜ் பன்னீர்செல்வம் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X