பொது செய்தி

தமிழ்நாடு

வேட்பாளர் கதறி அழும் வீடியோ

Added : அக் 07, 2021
Share
Advertisement
கண்டாச்சிபுரம்-கண்டாச்சிபுரத்தில் வேட்பாளர் ஒருவர் கதறி அழும் வீடியோ 'வாட்ஸ் அப்'பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஒன்றியத்தில் கண்டாச்சிபுரம் ஊராட்சித் தலைவர் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இப்பதவிக்கு மா.கம்யூ., பிரமுகர் கணபதி மனைவி ரேவதி, தி.மு.க., பிரமுகர் ரவிக்குமார் மனைவி ஸ்ரீதேவி

கண்டாச்சிபுரம்-கண்டாச்சிபுரத்தில் வேட்பாளர் ஒருவர் கதறி அழும் வீடியோ 'வாட்ஸ் அப்'பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஒன்றியத்தில் கண்டாச்சிபுரம் ஊராட்சித் தலைவர் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இப்பதவிக்கு மா.கம்யூ., பிரமுகர் கணபதி மனைவி ரேவதி, தி.மு.க., பிரமுகர் ரவிக்குமார் மனைவி ஸ்ரீதேவி போட்டியிடுகின்றனர். நேற்று காலை நடந்த ஓட்டுப்பதிவின் போது, எதிர்தரப்பினர் தன்னை மிரட்டியதாக ரேவதி கதறி அழுவது போன்ற வீடியோ 'வாட்ஸ் அப்'பில் வெளியானது.இதுகுறித்து ஸ்ரீதேவியின் கணவர் ரவிக்குமாரிடம் கேட்டபோது, 'குறிப்பிட்ட வீடியோ பதிவில் நான் இல்லாத நிலையில் இதுகுறித்து ஏதும் பேசுவதற்கில்லை. அந்த வீடியோ போலியானது' என்றார்.வேட்பாளர் ரேவதியின் கணவர் கணபதியிடம் கேட்டபோது, தனது மனைவியை எதிர்தரப்பினர் மிரட்டியதாகத் தெரிவித்தார். வீடியோ பதிவில் வேட்பாளர் ரேவதி தனியாக அழுவது போன்றும், அவரது ஆதரவாளர் ஒருவர் இதுகுறித்து கேட்பது போன்றும் உள்ளது.இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X