சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்பதிவு மைய கதவை மூடிய பெண் டாக்டரால் பரபரப்பு

Added : அக் 07, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே ஓட்டுப்பதிவு மைய கதவை மூடிய பெண் டாக்டரால் பரபரப்பு நிலவியது.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த மலையனுாரைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி குணசுந்தரி . அங்கனுார் பகுதியைச் சேர்ந்தவர், இருவரும் டாக்டர், புதுச்சேரியில் 15 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டு போடுவதற்காக குணசுந்தரி சொந்த

உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே ஓட்டுப்பதிவு மைய கதவை மூடிய பெண் டாக்டரால் பரபரப்பு நிலவியது.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த மலையனுாரைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி குணசுந்தரி . அங்கனுார் பகுதியைச் சேர்ந்தவர், இருவரும் டாக்டர், புதுச்சேரியில் 15 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டு போடுவதற்காக குணசுந்தரி சொந்த ஊரான அங்கனுார் கிராமத்திற்கு கணவர் ஏழுமலையுடன் நேற்று வந்தார்.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஓட்டுச்சாவடிக்கு காலை 11:00 மணியளவில் சென்றபோது ஆட்சேபனை தெரிவித்தனர். இதனால், குணசுந்தரி, ஏழுமலை ஆகியோரிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அப்போது ஓட்டுப்பதிவு மையத்திற்குள் சென்ற குணசுந்தரி, கதவை மூடிக் கொண்டதால் பரபரப்பு நிலவியது.அங்கு தேர்தல் அலுவலர்கள் மற்றும் ஏஜன்ட்டுகள் வெளியே செல்லுமாறு கூறியதைத் தொடர்ந்து 10 நிமிடம் கழித்து அவர் வெளியேறினார்.அவரிடம் போலீசார், இங்கு உங்களுக்கு ஓட்டு உள்ளதா? இப்பகுதியை சேர்ந்தவர் தான் என்பதற்கான ஆதாரங்களை எடுத்து வருமாறு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X