சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பட்டா முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
கோவை : காரமடை அருகே பட்டா வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் கூறிய கிராம மக்கள், நேற்று கலெக்டர் ஆபீஸில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.காரமடை எத்தப்ப நகரில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில், 91 பேருக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டது. இது தொடர்பாக இரு வேறு தரப்பினர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடர்ந்து புகார்களை தெரிவித்து வருகின்றனர்.'தகுதியற்ற நபர்களுக்கு பட்டா

கோவை : காரமடை அருகே பட்டா வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் கூறிய கிராம மக்கள், நேற்று கலெக்டர் ஆபீஸில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.காரமடை எத்தப்ப நகரில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில், 91 பேருக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டது.

இது தொடர்பாக இரு வேறு தரப்பினர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடர்ந்து புகார்களை தெரிவித்து வருகின்றனர்.'தகுதியற்ற நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டதாகவும், அவற்றை ரத்து செய்து தகுதியானவர்களுக்கு வழங்க வேண்டும்' என்றும் ஒரு தரப்பினர் புகார் எழுப்பினர். நேற்று கலெக்டர் வந்திருந்த கிராம மக்களில் ஒரு பிரிவினர், ஆர்.டி.ஓ., உள்ளிட்ட அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அதிகாரி ராம்குமார் கூறுகையில், ''புகார் தொடர்பாக ஆர்.டி.ஓ., விசாரணை நடந்துள்ளது. தகுதியற்றவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்கள் அனைத்தும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X