தமிழ்நாடு

குளங்கள் சீரமைப்பு எப்படியிருக்கு? தரக்கட்டுப்பாடு குழுவினர் ஆய்வு

Added : அக் 07, 2021
Share
Advertisement
கோவை, : கோவையில், பொதுப்பணித்துறை சார்பில், ரூ.230 கோடியில், குளங்கள் மற்றும் நீர் வழங்கு வாய்க்காலில் மேற்கொள்ளும் பணிகளை, தரக்கட்டுப்பாட்டு குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.நொய்யல் ஆறு வழித்தடத்தில் உள்ள அணைக்கட்டுகள், குளங்கள் மற்றும் நீர் வழங்கு வாய்க்கால்கள் புதுப்பித்தல், சீரமைத்தல், நவீனப்படுத்துதல் திட்டத்துக்கு, ரூ.230 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. மூன்று

கோவை, : கோவையில், பொதுப்பணித்துறை சார்பில், ரூ.230 கோடியில், குளங்கள் மற்றும் நீர் வழங்கு வாய்க்காலில் மேற்கொள்ளும் பணிகளை, தரக்கட்டுப்பாட்டு குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

நொய்யல் ஆறு வழித்தடத்தில் உள்ள அணைக்கட்டுகள், குளங்கள் மற்றும் நீர் வழங்கு வாய்க்கால்கள் புதுப்பித்தல், சீரமைத்தல், நவீனப்படுத்துதல் திட்டத்துக்கு, ரூ.230 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. மூன்று 'பேக்கேஜ்'களாக பிரித்து, இப்பணிகள் செய்யப்படுகின்றன.இவை, தரமின்றி மேற்கொள்வதாகவும், கான்கிரீட் கட்டுமானமாக இருப்பதால், பல்லுயிர் பெருக்கச் சூழல் பாதிப்பதாகவும், எல்லை அளவீடு செய்யாமல், குளத்தின் நீர்த்தேக்க பரப்பு சுருக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.பொதுப்பணித்துறை நீர் வள ஆதார அமைப்பு தலைமை பொறியாளர் அசோகன் களஆய்வு மேற்கொண்டார். இப்போது, குளங்களின் எல்லை அளவீடு செய்ய, சர்வேயர்கள் அனுப்ப, மாவட்ட வருவாய் அலுவலருக்கு, பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பியிருக்கிறது.

இச்சூழலில், பணியின் தரத்தை உறுதி செய்ய, பொதுப்பணித்துறை தரக்கட்டுப்பாடு சிறப்பு பிரிவு செயற்பொறியாளர் செல்வராஜ் தலைமையிலான குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் நேற்று கோவை வந்தனர். சித்திரைச்சாவடி அணைக்கட்டு பகுதியில் துவங்கி, சூலுார் குளம் வரை செய்யப்பட்டுள்ள பணிகளின் தரத்தை ஆய்வு செய்தனர்.உபகோட்ட பொறியாளர் திருமூர்த்தி, உதவி பொறியாளர் சிவக்குமார் உள்ளிட்ட, பணிகளின் விபரத்தை விளக்கினர்.புதிதாக ஷட்டர் அமைப்பது, மிகைபோக்கி கட்டுவது உட்பட மீதமுள்ள வேலைகளை விரைந்து மேற்கொள்ள, அக்குழுவினர் அறிவுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X