சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கத்தியைக் காட்டி பணம் பறித்தவர் கைது திண்டிவனத்தில் துரத்திப்பிடித்த போலீஸ்

Added : அக் 07, 2021
Share
Advertisement
திண்டிவனம்-திண்டிவனம் அருகே காரில் சென்றவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் கைது செய்தனர்.சென்னை, ஷெனாய் நகரைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன், 40; ஆர்க்கிடெக். இவர் நேற்று நெய்வேலியில் உள்ள ஒரு கன்ஸ்ட்ரக் ஷன் பணியை பார்வையிட்டு, மீண்டும் திண்டிவனம் வழியாக சென்னைக்கு 'ஐ20' காரில் மாலை 5 மணிக்கு சென்று

திண்டிவனம்-திண்டிவனம் அருகே காரில் சென்றவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் கைது செய்தனர்.சென்னை, ஷெனாய் நகரைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன், 40; ஆர்க்கிடெக். இவர் நேற்று நெய்வேலியில் உள்ள ஒரு கன்ஸ்ட்ரக் ஷன் பணியை பார்வையிட்டு, மீண்டும் திண்டிவனம் வழியாக சென்னைக்கு 'ஐ20' காரில் மாலை 5 மணிக்கு சென்று கொண்டிருந்தார்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் அருகே, பின் தொடர்ந்து ஸ்பிளண்டர் பைக்கில் வந்த இருவர் காரை உரசியது போல் வந்து நிறுத்தினர். அதிர்ச்சியடைந்த பாலசுப்ரமணியன் காரை நிறுத்தி, கதவை திறந்துள்ளார். அப்போது அந்த நபர்கள், திடீரென அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அவர் பர்சை எடுத்து 200 ரூபாய் கொடுத்துள்ளார். அப்போது பர்சை பறிக்க முயன்றனர். அதற்குள் காரின் அருகே வந்த ஒரு வாலிபர் தனது பைக்கை நிறுத்தியதும், இருவரும் தப்பிச்சென்றனர்.அவ்வழியாக வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசாரிடம் பாலசுப்ரமணியன் புகார் தெரிவித்தார். பைக்கில் தப்பிச் சென்ற நபர்களை போலீசார் துரத்திச்சென்று, ஓங்கூர் அருகே பொது மக்கள் உதவியுடன் பிடித்தனர். பைக்கை ஓட்டிய நபர் தப்பியோடினார். பிடிபட்ட நபரை ஒலக்கூர் போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில், நீலகிரி மாவட்டம் குன்னுார் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த், 21; என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்து கத்தி மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X