பொது செய்தி

இந்தியா

கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம் வேண்டும்

Added : அக் 07, 2021
Share
Advertisement
புதுச்சேரி-'கட்டாய மதமாற்றத்தை தடுக்க கடுமையான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்' என விஸ்வ இந்து பரிஷத் வலியுறுத்தி உள்ளது.விஸ்வ இந்து பரிஷத் அகில உலக பொதுச்செயலாளர் மிலிந்த் பிராண்டே, நேற்று புதுச்சேரியில் அளித்த பேட்டி:நாடு முழுவதும் பல மாநிலங்களில் கட்டாய மத மாற்றம் அதிகரித்துள்ளது. கட்டாய மதமாற்றத்தை தடுக்க, 11 மாநிலங்களில் தடை சட்டம் உள்ளது. கட்டாய மத

புதுச்சேரி-'கட்டாய மதமாற்றத்தை தடுக்க கடுமையான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்' என விஸ்வ இந்து பரிஷத் வலியுறுத்தி உள்ளது.விஸ்வ இந்து பரிஷத் அகில உலக பொதுச்செயலாளர் மிலிந்த் பிராண்டே, நேற்று புதுச்சேரியில் அளித்த பேட்டி:நாடு முழுவதும் பல மாநிலங்களில் கட்டாய மத மாற்றம் அதிகரித்துள்ளது. கட்டாய மதமாற்றத்தை தடுக்க, 11 மாநிலங்களில் தடை சட்டம் உள்ளது. கட்டாய மத மாற்றத்தை தடுக்க, கடுமையான சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும். இதற்காக அனைத்து மாநில அரசுகளையும் சந்தித்து வலியுறுத்தி வருகிறோம். புதுச்சேரியிலும் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை கொண்டுவர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.மாநில அரசுகள் கோவில்கள் மீது உரிமை கொண்டாடக் கூடாது. இந்து கோவில்களையும், திருமடங்களையும் இந்து சமுதாயத்திடம் அரசுகள் ஒப்படைக்க வேண்டும்.இதர மதத்தினரை போல், இந்து கோயில்களை இந்துக்களிடம் தரவேண்டும். இந்து கோவில்களில் பக்தர்களால் தரப்படும் காணிக்கைகள் சரிவர கையாளப்படுவதில்லை. கோயில் காணிக்கைகளை வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது. பக்தர்கள் தரும் காணிக்கைகளை இந்து மதம் சாராத பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது.அயோத்தியில் ராமர் கோவில் பிரம்மாண்ட கட்டுமானப் பணி நடந்து வருகிறது. அடித்தளம் கட்டுமானப் பணி, இம்மாதத்திற்குள் நிறைவடையும்.வரும் 2023ம் ஆண்டு டிசம்பரில் ராமர் கோவில் கட்டுமான பணி நிறைவடையும் என எதிர்பார்க்கிறோம். அந்த டிசம்பர் மாதத்திலேயே ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெறும்.இந்த மாபெரும் விழாவில் நாட்டு மக்களை பங்கேற்க வைக்கும் விதமாக பல்வேறு பணிகளை மேற்கொள்ள உள்ளோம்.கொரோனா பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நாடு முழுவதும் 2.5 கோடி உணவு பொட்டலங்கள், குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை செய்துள்ளோம்.அத்துடன் மருத்துவ வசதிகள், இறுதிச்சடங்கு உட்பட பல்வேறு சேவைகளை செய்துள்ளோம். கிராமப் புறங்களில் மக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மக்களின் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின்போது, விஷ்வ இந்து பரிஷத் வட தமிழக செயலாளர் ஞானகுரு, அமைப்பு செயலாளர் ராமன், இணைசெயலாளர் ராஜா, புதுச்சேரி சமுதாய நல்லிணக்க அமைப்பாளர் வேல்முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X