கஞ்சா பறிமுதல் ஏழு பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கஞ்சா பறிமுதல் ஏழு பேர் கைது

Added : அக் 07, 2021
Share
கோவை : கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், போதைப்பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையாக, அதிரடி சோதனை நடத்த எஸ்.பி., செல்வநாகரத்தினம் உத்தரவிட்டார். இதனையடுத்து நடந்த சோதனையில், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜுபின் வர்கீஸ், அன்னூர் பகுதியைச் சேர்ந்த அக்ஷய தாஸ், துடியலூர் பகுதியை சேர்ந்த

கோவை : கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், போதைப்பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையாக, அதிரடி சோதனை நடத்த எஸ்.பி., செல்வநாகரத்தினம் உத்தரவிட்டார்.

இதனையடுத்து நடந்த சோதனையில், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜுபின் வர்கீஸ், அன்னூர் பகுதியைச் சேர்ந்த அக்ஷய தாஸ், துடியலூர் பகுதியை சேர்ந்த பிச்சைமணி, செட்டிபாளையத்தைச் சேர்ந்த பூவரசன், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அஜித், தமிழ்ச்செல்வன், லட்சுமி, பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த பவித்ரன் ஆகிய ஏழு பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து, 5.26 கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்தனர். வழக்கு பதிவு செய்யப்பட்டு, 7 பேரும் நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X