பொது செய்தி

இந்தியா

கொரோனா பாதித்த தாய் மரணம் மகனின் கதறல் வீடியோ வைரல்

Added : அக் 07, 2021
Share
Advertisement
சிதம்பரம்-சிதம்பரம் மருத்துவமனையில் டாக்டர் இல்லாதது; சுவாச கருவி சரியாக வேலை செய்யாததால், தனது தாய் இறந்துவிட்டதாக மகன் கதறி அழும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.கடலுார் மாவட்டம், சிதம்பரம், வீரராகவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோதண்டராமன் மனைவி செந்தாமரைச்செல்வி, 54; கணவன், மனைவி கொரோனா தொற்றால் பாதித்தனர்.கோதண்டராமன் கடந்த 1ம் தேதி இறந்தார்.

சிதம்பரம்-சிதம்பரம் மருத்துவமனையில் டாக்டர் இல்லாதது; சுவாச கருவி சரியாக வேலை செய்யாததால், தனது தாய் இறந்துவிட்டதாக மகன் கதறி அழும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.கடலுார் மாவட்டம், சிதம்பரம், வீரராகவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோதண்டராமன் மனைவி செந்தாமரைச்செல்வி, 54; கணவன், மனைவி கொரோனா தொற்றால் பாதித்தனர்.கோதண்டராமன் கடந்த 1ம் தேதி இறந்தார். செந்தாமரைச்செல்வி கடந்த மாதம் 24ம் தேதி முதல், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தார்.அப்போது, அங்கிருந்த அவரது மகன் சீனிவாசன் தாய் இறந்ததும், அங்குள்ள பணியாளர்கள் அவரை காப்பாற்ற முயற்சித்ததையும், தனது மொபைல் போனில் வீடியோ எடுத்தார். டாக்டர் இல்லாதது; சுவாச கருவி சரியாக வேலை செய்யாததால், தனது தாய் இறந்துவிட்டதாக கதறினார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இது குறித்து போலீசார் மற்றும் பல்கலைக் கழக நிர்வாகத்தினர் விசாரணை நடத்தினர்.இது தொடர்பாக பதிவாளர் (பொறுப்பு) ஞானதேவன் கூறுகையில், அதீத கொரோனா தொற்றுடன் அப்பெண் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையில் இருந்தார். மருத்துவர்கள் போராடியும் அவரை காப்பாற்ற முடியவில்லை' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X