சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகன்கள் கண் முன்னே விபத்தில் தந்தை பலி

Added : அக் 07, 2021
Share
Advertisement
சிதம்பரம்-சிதம்பரம் அருகே ஜீப் டயர் வெடித்து பாலத்தில் மோதிய விபத்தில் மகன்கள் கண் முன் தந்தை இறந்தார்.மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த வேட்டங்குடி பகுதியை சேர்ந்தவர் கோதண்டம், 60. இவரது மகன்கள் அசோக், 29; அபினேஷ், 24. மூவரும் நேற்று காலை பொலிரோ ஜீப்பில் சீர்காழியில் இருந்து புறப்பட்டு அரியலுாரில் உள்ள கலியபெருமாள் கோவிலுக்கு சென்றனர். பின் மீண்டும் வீடு

சிதம்பரம்-சிதம்பரம் அருகே ஜீப் டயர் வெடித்து பாலத்தில் மோதிய விபத்தில் மகன்கள் கண் முன் தந்தை இறந்தார்.மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த வேட்டங்குடி பகுதியை சேர்ந்தவர் கோதண்டம், 60. இவரது மகன்கள் அசோக், 29; அபினேஷ், 24. மூவரும் நேற்று காலை பொலிரோ ஜீப்பில் சீர்காழியில் இருந்து புறப்பட்டு அரியலுாரில் உள்ள கலியபெருமாள் கோவிலுக்கு சென்றனர். பின் மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அபினேஷ் ஜீப்பை ஓட்டினார்.சிதம்பரம் - சீர்காழி சாலையில், திடீரென ஜீப்பின் இடது பக்க முன் பக்க டயர் வெடித்து, சாலையோர பாலத்தில் மோதியது.இந்த விபத்தில் கோதண்டம் இறந்தார். அசோக், அபினேஷ் சிறு காயங்களுடன் தப்பினர். மகன்கள் கண் முன் தந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X