சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சர்க்கார் பட பாணியில் ஓட்டு கேட்டு பெண் வாக்குவாதம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
ரிஷிவந்தியம்-பகண்டைகூட்ரோடு அரசு துவக்கப்பள்ளியில் 'சர்க்கார்' பட பாணியில் ஓட்டு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த வாணாபுரம் ஊராட்சியில் 6 மற்றும் 8வது வார்டு வாக்காளர்களுக்கான ஓட்டுப்பதிவு, பகண்டைகூட்ரோடு அரசு துவக்க பள்ளியில் நடந்தது.தேர்தலில் ஓட்டு போடுவதற்காக, வாணாபுரம் ஊராட்சியைச்

ரிஷிவந்தியம்-பகண்டைகூட்ரோடு அரசு துவக்கப்பள்ளியில் 'சர்க்கார்' பட பாணியில் ஓட்டு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த வாணாபுரம் ஊராட்சியில் 6 மற்றும் 8வது வார்டு வாக்காளர்களுக்கான ஓட்டுப்பதிவு, பகண்டைகூட்ரோடு அரசு துவக்க பள்ளியில் நடந்தது.தேர்தலில் ஓட்டு போடுவதற்காக, வாணாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த அந்தோணியம்மாள் என்பவர் மும்பையில் இருந்து நேற்று மாலை 5:00 மணியளவில் வந்துள்ளார்.ஓட்டுச்சாவடிக்கு சென்று பார்த்த போது, இவரது பெயரில் ஏற்கனவே ஓட்டு பதிவாகி இருப்பதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.ஆத்திரமடைந்த அந்தோணியம்மாள், ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.தொடர்ந்து தனக்கு 'டெண்டர்' ஓட்டு வழங்குமாறு அந்தோணியம்மாள் கேட்டார். உடன் டெண்டர் ஓட்டுக்கான படிவங்கள் கொண்டு வரப்பட்டது.அப்போது அந்தோணியம்மாளின் வாக்காளர் அடையாள அட்டையில் இருந்த எண்ணும், வாக்காளர் பட்டியலில் இருந்த எண்ணும் வெவ்வேறாக இருந்தது.இதையொட்டி உங்களால் ஓட்டளிக்க முடியாது என ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தெரிவித்தனர்.இதனால் அந்தோணியம்மாள் மீண்டும் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.தகவலறிந்து வந்த பகண்டைகூட்ரோடு சப் இன்ஸ்பெக்டர் சோலை, அந்தோணியம்மாளிடம் பேசி, இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரிடம் முறையிடுமாறு தெரிவித்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். இரவு 7:00 மணி வரை வாக்குவாதம் நீடித்ததால் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X